Chennai Friends in Facebook

Tuesday, 29 April 2008

சென்னை பிரண்ட்ஸ்

             சென்னை FRIENDS வலைத்தளம் உங்களை அன்போடு 

வரவேற்கிறது 

                                       
வரவேற்பு பேனர் பார்த்திட்டு நாங்க வெட்டிய கத பேசர பசங்க மட்டும் 
நினைச்சிடாதிங்க,படிப்பு,தொழில்,வேலைவாய்ப்பு போன்ற செய்திகளை நண்பர்கள் மத்தியில் பரிமாறி கொள்கிறோம்,மேலும் அவசர உதவிக்கு ரத்த தானமும் செய்றோம்.பொழுது போக்குக்கு மட்டும் இல்லாமல் சென்னை நண்பர்களுக்கான  தகவல் தளமாக செயல்பட அனைத்து சென்னை  நன்பர்களை அன்போடு அழைக்கிறோம்.

 நண்பர்களே சென்னையில் நீங்கள் வசிக்கும் பகுதியின் பாரம்பரிய மிக்க செய்திகள்,வளர்ச்சிகள்,அரிய புகைப்படங்கள்,அன்றாட செய்திகள் போன்றவற்றை “அக்கம் பக்கம்” பகுதியில் எழுதலாம்.

,மேலும் உங்கள் பகுதியில் உள்ள சுவையான உணவகங்கள்,JUICE & ICE CREAM PARLORS போன்றவற்றின் தகவல்களை “சோறு தண்ணி” பகுதியிலும்,பிடித்த சினிமா,உங்கள் பகுதியில் உள்ள திரை அரங்குகள் பற்றிய தகவல்களை “பயாஸ்கோப்” பகுதியிலும்

உங்கள் பள்ளி,கல்லூரி மற்றும் ஏரியா நண்பர்களை பற்றி நல்ல தகவல்கள்,பிறந்த நாள் வாழ்த்துகள்,கோபித்து கொண்டு சென்ற நண்பர்களுக்கு ஆறுதல் அல்லது மன்னிப்பு, நீண்ட நாட்களாக தேடி கொண்டிருக்கும் பள்ளி,கல்லூரி,அலுவலக நண்பர்களுக்கு செய்தி போன்றவற்றை “நண்பேண்டா” பகுதியிலும்,

உங்களுக்கும் தோன்றும் புது தொழில் யோசனைகள் மற்றும் பழைய தொழில்களை புதிய வடிவத்தில் (Redifined Business idea's) செய்ய மாற்று யோசனைகளை “மாத்தி யோசி” பகுதியில் பகிந்து கொள்ளுங்கள்.

மேலும் நீங்கள் அன்மையில் மிக குறைந்த விலையில்,தரமாக வாங்கிய ஆடை அணிகலன்கள்,காலணிகள்,மொபைல் ஃபோன்,கம்ப்யூட்டர்,உதிரி பாகங்கள் போன்வற்றின் புகைப்படம்,கடை முகவரியை “கடை தெரு” பகுதியில் பகிர்ந்து கொள்ளலாம்.

 உங்களுக்கு தெரிந்த அழகு,சமையல்,அரோக்கிய,குறிப்புகளை ”டிப்ஸ்” பகுதியில் பகிர்ந்து கொள்ளலாம்.

நீங்கள் பகிர்ந்த கொள்ள விரும்பும் விஷயங்களை chennaifrienz@gmail.com அனுப்புமாறு  தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.