Chennai Friends in Facebook

Friday, 12 October 2012

என் ஆள பத்தி சொல்லனும்னா ஒரே வரியில் சொல்லிடலாம்

      கைக்கடிகாரத்தை பார்த்தேன்  மாலை 5.40 LAPTOP-யை SHUTDOWN செய்தேன்,என் அலுவலக கேபின் AC-யை அணைத்து விட்டு,செக்ரியுட்டி LOGOUT செய்து வெளியே வந்தேன்.மறையும் சமயத்திலும் கதிரவன் இயற்க்கை வளங்களை அழித்த மனித குலத்தை தன் அக்னி பார்வையால் எரித்து கொண்டிருந்தான், திரும்பி உள்ளே சென்று விடலாம் என்று நினைத்த பொழுது என் MOBILE செல்லமாக சினிங்கியது,செல்லமாக சினிங்கியது என்றவுடன் கண்டு பிடுத்திருப்பிர்கள்

yamaha fazer

யாருடைய அழைப்பு என்று சந்தேகமே வேண்டாம் என் காதலியே தான்,”கிளம்பியாச்சா..?” என்றாள்,”இதோ கிளம்பி வாசலில் தான் நிக்றேன்” என்றேன்.”சரி நானும் கிளம்பிட்டேன் இன்னும் 30 நிமிஷத்தில நாம USUAL-ல MEET பண்ணற எடத்துக்கு வந்துட்றேன்” என்றதும் என் செல்போன் அணைத்து விட்டு OFFICE BASEMENT PARKING AREA-விலிருந்து  என் FAZER BIKE-யை எடுத்து கொண்டு அலுவல வளாகத்தை விட்டு வெளியே வந்தேன்,அருகில் இருக்கும் சுப்பு அண்ணா பொட்டி கடையில் ஒரு KINGS வாங்கி நிதானமாக தம் அடித்தேன்,"என்னடா இவன் LOVER வர சொல்லிட்டு நின்னு தம் அடிக்கிறானு பாக்கிறங்களா BOSS" நாங்க MEET பணற எடம் அவ OFFICE-லிருந்து 30 நிமிஷம் ,எனக்கு 5 நிமிஷம் தான் ஆகும் அதான் சின்னதா ஒரு தம் அடிச்ச கையோட ஒரு BOOMER வாங்கி வாயில போட்டேன்,FAZER-யை START செய்து சின்னதா ஒரு WHEELING SCENE-அ போட்டு 5 வது நிமிடத்தில் நாங்க MEET பன்ற COFFEE SHOP-ல் ஒரு டேபிள் பார்த்து உட்காந்தேன்.

      அந்த டேபிள் IN-CHARGE தூர இருந்து கை காட்டினார்,அவருக்கு தெரியும் நான் காத்திருப்பது யாருக்கென்று,சரியாக 18 வது நிமிடம் என் தேவதையின் SCOOTY STREAK-ன் INDICATOR சத்தம், என் ரத்த நாளங்களில் சிறு இசை

tvs scooty

அதிர்வை உருவாக்கியது.அதெல்லாம் சரி இவ்வளவு BUILD-UP கொடுக்குறேனே இவன் ஆளு எப்படி இருக்கும் தான் நினைக்கிறீங்க...உங்க MIND VOICE-யை எப்படி புடிச்சேன் பாத்தீங்களா..BOSS.

     என் ஆள பத்தி சொல்லனும்னா ஒரே வரியில் சொல்லிடலாம் பாஸ்,நடிகை சமந்தா எங்க பக்கத்து வீட்டு பொண்ணா இருந்தா எப்படி

.
506073_CUSTOMIZATION

அழகா,எளிமையா இருப்பாங்களோ அப்படி தான் இருப்பா,பெயர் கீர்த்தனா,இப்ப சொல்லுங்க நான் காத்திருப்பது நியாயம் தானே,OK....OK,அவ டேபிள் கிட்ட வந்துட்டா.....”ஹாய் கீர்த்து”என்றேன்.என் எதிரே வந்து அமர்ந்தாள்,என்னை சுற்றி ஒரு ஒளி வட்டம்வந்திறங்கியது,சுற்றி அமர்துள்ள அத்தனை பசங்களையும் ஒரு திமிரான பார்வை பார்த்தேன்.அவள் ”ஹாய்” என்றதும் நான் சுய உணர்வுக்கு திரும்பினேன்,டேபிள் IN-CHARGE அருகில் வந்தார், அவளுக்கு பிடித்த TROPICAL ICEBERG என்ற COLD COFFEE-யை ORDER செய்தேன்

samantha actressof kollywood

     அரை மணி நேரம் அவள் அம்மாவின் மோர் குழம்பு,அக்கா குழந்தை இவள் மடியில் உச்சா போன கதை,அவள் அண்ணண் பிகரை பற்றி புலம்பல்,அவள் அப்பாவின் BUSINESS பற்றி பீத்தல் என ஓடியது,என்னடா இவன் இந்த ஃபிகரு இவ்வளவு மோக்கை போடுது இவன் சும்மா இருக்கானேனு பாக்கிறிங்களா, நம்ம மூஞ்சிக்கு இந்த மாதிரி ஃபிகர் மாட்டிறதே பெரிய விஷயம்,இப்படி ஒப்பேத்தினா தானே முடியம்.
     கிளம்பட்டுமா என குரல் கேட்டு சுய நினைவுக்கு வந்தேன்,OK DEAR SEE YOU TOMORROW என மனசில்லாமல் விடைக்கொடுத்தேன்,என் மனதை புரிந்த கொண்ட அவள் ஆதரவாக என் உள்ளங்கையில் யாருக்கும் தெரியாமல் அவளின் இரு கைளை அழுத்தி விடைக்கொடுத்தாள்.அவளின் அந்த பிரியா விடையின் உணர்வு FREEZER-ல இருந்து எடுத்த KINGFSHER LAGER BEER-யை அப்படி OPEN பண்ணி வாயில வச்ச மாதிரி சில்லுனு இருந்திச்சு.அவளின் SCOOTY STREAK COFFEE SHOP-ன் PARKING LOUNGE-யை விட்டு வெளியேறிய பின் தான் அந்த சில்லன்ற உணர்வு நீங்கியது போல் தோன்றியது.

     திடிரென மிண்டும் அதே சில்லென்ற உணர்வு ஆனால் அதை விட வேகமாக என் முகத்தில் மோதியது கூடவே வசை மொழி வேறு “டேய் மூதேவி எழுந்திரு INTERVIEW-க்கு நேரமாச்சு,எதிரே என் ROOM MATE WATER JUG-வோட  நின்று இருந்தான்”என்னடா கனவா,பக்கத்து வீட்டு சமந்தா வந்தாளா? ...”ம் ” என்றேன்..ஏன் உனக்கு எதிர் வீட்டு சமந்தா வந்தாளா என்றேன்..அதற்கு அவன் “ம்ம்...”என்றான்.OK எழுந்திரு INTERVIEW போய்ட்டு வந்து கனவு காணலாம் என்றான்.


பின் குறிப்பு :
என்ன பாஸ் குழப்பமா இருக்கா நாங்க யாருனு நினைக்கிறிங்க HIGH CLASS FAMILY-யோட போட்டியும் போட முடியாம,LOW CLASS FAMILY மாதிரி ADJUST பண்ணி வாழ தெரியாம,ஒரே NIGHT-ல அண்ணாமலை ரஜினி சார் மாதிரி,ENGINEERING  படித்த
நம்ம பையன் வாழ்க்கை மாறிடும்-னும் பக்க்த்து வீட்டு காரன், எதிரி வீட்டுக்காரன்,அலுவலக மேலாளர்,அலுவலக நண்பர்,என பலர் சொன்னதை கேட்டு நம்ம பையனுக்கு என்ன படிப்பு வரும்னு யோசிக்காம,கடன் வாங்கி,தோப்ப வித்து படிக்க வெச்ச அப்பா அம்மாவிற்கு பிறந்து, BE,B.TECH படித்தால் AC CABIN,FAZER BIKE,SUPER FIGURE,WEEKEND ECR RIDING,COCKTAIL PARTY,அப்படி எல்லாம் ஜாலியா LIFE-அ ENJOY பண்ணலாம் என கற்பனை உலகத்தில பொழுது கழிக்கும் "ENGINEERING படித்தும் வேலையில்லா பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள்.
  
இந்த சங்க உறுப்பினர்களின் பகிர்வுகள் மிண்டும் தொடரும்

நன்றி வணக்கம்
விஸ்வாமித்ரன்

1 comment:

Unknown said...

realy nice,registered a truth of engineering graduates like me.