Chennai Friends in Facebook

Thursday, 18 October 2012

நான் கீர்த்தனா Photography என் Profession

i am keerthana freelancing photographer
       ஹாய் ஃப்ரண்ட்ஸ் நான் கீர்த்தனா,யாருனு யோசிக்கிறிங்களா போன ARTICLE-ல விஸ்வா கூட COFFEE DAY-ல TROPICAL ICEBERG சாப்பிட்ட அதே கீர்த்து என்கிற கீர்த்தனா நானே தான், என்னடா அவன் கனவில வந்த பொண்ணு நிஜமா வருதேனு பாக்கிறீங்களா உணமை தாங்க.

       நாம கனவு காண்கிற பொருளா,வேலையோ,படிப்போ,வசதி,வாய்ப்புகளோ அல்லது வாழ்க்கை துணையோ எதுவா இருந்தாலும் இந்த உலகத்திலே ஏதோவொரு மூலையில நமக்காக காத்துக்கிட்டுருக்கு, நம்மளோட,ஆர்வத்திலேயும்,தன்னம்பிக்கையிலும்,விடா முயற்சியிலும் தான் நாம கனவு நினைவாகற விஷயம் அடங்கி இருக்கு.விஸ்வாக்கு ஒரு லட்சிய கனவு இருந்த மாதிரி எனக்கும் உண்டுங்க,என்ன “நானி” மாதிரி பாய் ஃப்ரண்டானு நினைக்கிறீங்களா அதான் இல்ல.

       “PHOTOGRAPHY” இது தான் என் கனவு எந்த வயசில இந்த ஆசை வந்ததுனு தெரியாது ஆனால யாரால வந்ததுனு தெரியும் எங்க சித்தப்பா ஒரு கேமரா பைத்தியம் ஆனா அவர் தொழில் PHOTOGRAPHY இல்லை,வித வித கேமரா வச்சிருக்காரு FILTERS


வச்சிருக்காரு லீவு நாட்களா எங்களா வித விதமா நிறைய போட்டோ எடுத்து PRINT போட்டு ரசிப்பார். நான் விஸ்வா சொல்ற மாதிரி பக்கத்து வீட்டு சமந்தா பொண்ணு மாதிரி இருப்பேனோ இல்லையோ,எங்க சித்தப்பா எடுக்கிற போட்டோவில பத்து வீடு தள்ளி இருக்கிற சமந்தா பொண்ணு மாதிரி சத்தியமா அழகாவே இருப்பேன்.சராசரியா எல்லா மனிதர்களுக்கும் நம்மை அழகா காட்டுகிற பொருள் மீது ஈர்ப்பு இருக்கும் அந்த மாதிரி தான்,என்னை அழகா காட்டின PHOTOGRAPHY மீது ஈர்ப்பு வந்தது நினைக்கிறேன்.

        என் முதல் கிளிக்: ஐந்து வருஷத்துக்கு முன்னாடி எங்க அக்காவை பொண்ணு பார்க்க வந்தாங்க வந்த மாப்பிள்ளை போோவில்பார்த்ததை விட நல்லாவே இருந்தாரு எங்க அக்காவுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு,மத்த ஏற்பாடுகளே செய்றத பத்தி பெரியவங்க பேச ஆரம்பிச்சாங்க,எங்க அக்கா என் கிட்ட வந்து ”அவர் எப்படி இருக்கார்”என்றாள்,அவளை கிண்டல் பண்ணறத்துக்காக ”என்னமோ என் கண்ணுக்கு சுமார தான் இருக்காரு” என்று சொன்னேன்,” அதற்கு அவள் “ஆமா இவ கண்ணு பெரிய கேமரா கண்ணு பாரு” என்று கோபமாக சொல்லி விட்டு அவள் அறைக்குள் சென்றுவிட்டாள்,அப்ப தான் எனுக்குள் அந்த FLASH அடுத்தது மாப்பிள்ளைக்கு தெரியாமல் அவரை CASUAL-அ போட்டோ எடுத்து அக்காகிட்ட குடுத்த எப்படி இருக்கும்ன தோனுச்சி,நேர சித்தப்பாகிட்ட போயி விஷயத்தை சொன்னென் முதலில் தயங்கியவர் என் PHOTOGRAPHY ஆர்வத்தை கண்டு அவர் புதிதாக வாங்கி இருந்த SONY CYBER SHOT CAMERA எடுத்து கொடுத்து 5 நிமிடம் ”HOW TO OPERATE CYBERSHOT CAMERA” என்ற விளக்கும் கொடுத்து விட்டு மாப்பிள்ளை வீட்டார் கண்ணில் படாமல் எடு என்று எச்சரித்துவிட்டு சென்றார்,வாழ்க்கையில் முதல் தடவையா போட்டோ எடுக்க போறேன் அதிலும் எங்க அக்காவை சந்தோஷ படுத்தனும்,முடிவு செய்தாச்சு இவர் தான் எங்க அக்கா வீட்டுக்காரர் என்று,எந்த ஒரு சந்தர்ப்பத்திலேயும் அந்த புகைப்படம் மாமாவையும் அக்காவையும் சஞ்சலபடுத்த கூடாது,அதே நேரத்தில் காலத்திற்க்கும் என் பெயரை சொல்ல வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டு கூடத்திற்க்கு வந்தேன்,பெரியவர்கள் கூட்டத்தில் உட்கார்ந்து நெளிந்து கொண்டிருந்தார் என் வருங்கால மாமா. நானும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தேன். எதேச்சையாக திரும்பிய என் சித்தப்பா நான் தவிப்பதை கண்டு என் அண்ணனை அழைத்து “டேய் கணபதி அங்க என்ன பண்ணற மாப்பிள்ளை தனியா போரடிச்சிக்கிட்டு உங்காதிருக்காரரு,அவரை கூட்டிட்டு போய் தோட்டத்தை எல்லாம் சுத்தி காட்டுடா என்றார். இப்படி யாராவது காப்பாற்ற மாட்டார்களா என்று காத்து கிடந்தவர் தன் நெகிழ்ச்சியாக ஒரு நன்றியை புன்னகையாக சிந்திவிட்டு என் அண்ணன் பின்னால் சென்றார்,என் சித்தப்பாவின் சமயோசித அறிவை சைகையால் பாராட்டிவிட்டு நானும் வேகமாக மாடியில் இருக்கும் என் அண்ணன் அறைக்கு ஓடினேன் அங்கு இருந்து பார்த்தால் எங்கள் தோட்டத்தின் FULL VIEW-வும் தெரியும்.

        அண்ணன் அவரை கூட்டி கொண்டு மாட்டு தொழுவம்,கிணத்து மேடு,மோட்டர் ரூம் நாங்கள் குல தெய்வாமாக வழிப்படும் தோட்டத்தில் உள்ள பாம்பு புற்று என சுத்தி காட்டி கொண்டிருந்தான் எனக்கு எந்த இடமும் திருப்தியாக இல்லை,அந்த நேரத்தில் எங்கள் ஊரிலேயே மிக வயதான பாட்டியான ”மாக்காயி கிழவி” மாப்பிள்ளையை காண வீட்டின் பின்புறம் வந்தாள்,என் அண்ணனை பார்த்து “ஏம்பா கணபதி இவர் தான் நம்ம வைஷ்ணவிய கட்டிக்க போற மாப்பிள்ளையா என்று கேட்டாள் ,”ஆமா பாட்டி இவர் தான் என்று” என் அண்ணன் மாப்பிள்ளையிடம் மாக்காயி கிழவியை அறிமுக செய்து வைக்க,இவர் வணக்கம் சொல்ல கிழவி ஆசிர்வாதம் செய்ய,இதை விட என்ன வேண்டும் என் முதல் கிளிக்-யை அடிக்க.இன்று மாக்காயி கிழவி உயிரோடு இல்லை,ஆனால் அவள் வீட்டில் கூட என் முதல் கிளிக்கில் புகைப்படமாக ஆசிர்வதித்து கொண்டிருக்கிறாள்.
        என் FLASH BACK சொல்றேனு ரொம்ப மொக்கை போட்டுடேனா சாரி ஃப்ரண்ட்ஸ் இன்னிக்கு நான் சென்னையில் இருக்கிற WEB DEVELOPMENT AND IMAGE PROCESSING COMPANYகளுக்கு FREELANCING PHOTOGRAPHER-அ வேலை பாக்கிறேனா அதுக்கு இந்த FLASH BACK அவசியம் தான்.இரண்டாவது பாராவில் சொன்ன மாதிரி  நாம காண்கிற கனவு இந்த உலகத்தில ஏதோவொரு மூலையில நமக்காக காத்துகிட்டுருக்கு,அப்படி எனக்கு காத்திக்கிட்டுருந்த வேலை தான் என் FREELANCING PHOTOGRAPHER வேலை.

        நான் +2 முடித்தவுடன் என் அண்ணன் அக்கா மாதிரி நானும் ENGIEERING படிக்க வேண்டும் அப்ப தான் நல்ல SOFTWARE—ல வேலை செய்ற பெரிய மாப்பிள்ளை (அக்கா விட்டுகாரர்) மாதிரி எனக்கும் மாப்பிள்ளை கிடைப்பார் என்று அம்மா,அப்பா எல்லோரும் விரும்பினாங்க,எனக்கு துளியும் விருப்பமில்லை என் ஆர்வமும் ஆசையும் PHOTOGRAPHY மீத இருந்தது,ஆனால் அத்துறையின் வேலைவாய்ப்பு,எதிர்காலம் மற்றும் வருமானம் பற்றி விவரங்கள் எதுவும் தெரியாமல் அவர்களுடன் வாதம் செய்வதோ,பிடிவாதம் பிடிப்பதோ நல்லா இருக்காது,அதற்காக ENGINEERING படிக்கவும்

விருப்பமில்லை.இதை என் சித்தப்பாவிடமும்,மாமாவிடமும் (அக்கா விட்டுக்காரர் ) கூறினேன்,சித்தப்பா சிறிது தயங்கினார்,ஆனால் மாமா கவலை படாதே அதற்கான ஏற்பாட்டை நான் செய்கிறேன்,நீ அவர்கள் சொல்வதை போல் ENGINEERING APPLY செய், நீ PHOTOGRAPHY படிப்பது என் பொருப்பு என்றார், மாமா சொன்னதை போல் ENGINEERING APPLY செய்தேன்,அந்த குறிப்பிட்ட நாளும் வந்தது,சென்னை ANNA UNIVERISTY-யில் COUNSELING,மாமா அக்கா சென்னையில் இருந்ததால் அங்கிருந்து COUNSELING செல்வதாக முடிவு செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே  நான் அப்பா,சித்தப்பாவுடன் சென்னைக்கு கிளம்பி சென்றேன்.

        காலையில் சென்னையில் அக்கா வீட்டிற்கு வந்திறங்கினோம்,மாமா எங்களை  காரில் வந்து அழைத்து சென்று வீட்டில் விட்டுட்டு அவர் OFFICE கிளம்பி சென்றார்,கிளம்பும் போது சாயந்திரம் உனக்கு ஒரு SURPRISE இருக்கிறது என்று ரகசியமாக சொல்லி விட்டு கிளம்பினார்.அதன் பின் அப்பாவும் சித்தப்பாவும் சென்னையில் இருக்கும் ஊர்க்காரரை பார்க்க கிளம்பி சென்றார்கள், நான் சிறிது நேரம் அக்கா குழந்தையுடன் விளையாடி,மத்தியான சமையலுக்கு அக்காவிற்க்கு உதவி செய்து சாப்பிட்டு விட்டு உறங்க சென்றேன்.நன்றாக தூங்கி கொண்டிருந்த என்னை அக்கா எழுப்பினாள்”எழுந்திரு மாமா நம்ம எல்லோரை தயாரா இருக்க சொன்னார் வெளிய போகனுமாம்”என்றாள், வெளியே சென்றிருந்த அப்பாவும்,சித்தப்பாவும் வந்திருந்தார்கள்.ஒரு மணி நேரத்தில் எல்லோரும் தயாராகவும்,மாமாவின் கார் APPARTMENTS PARKING நுழைந்தது.அடுத்த அரைமணி நேரத்தில் மாமாவும் கிளம்பி எல்லோரும் காரில் பயணித்து கொண்டிருந்தோம்.20 நிமிட பயணத்தில் இறுதியில் ஒரு காம்பவுண்ட் உள்ளே எங்கள் கார் நுழைந்து நின்றது.காரிலிருந்து இறங்கிய எனக்கு அந்த கட்டிடத்தின் பெயரை கண்டதும் என் முகத்தில் மின்னலென FLASH,ஏன்னா மாமா எங்களை கூட்டி வந்தது அடையாரில் உள்ள CHENNAI PHOTOGRAPHY CLUB,அப்பா இங்கே ஏன் மாப்பிள்ளை கூட்டி வந்தார் என்று விழிக்க சித்தப்பாவிற்கு புரிந்துவிட்டது.அக்காவிற்கு இந்த விஷயம் தெரியும் என்பதை போல என்னை பார்த்து சிரித்தாள்,மாமா யாருடனோ MOBILE-ல் பேசினார் சிறிது நேரத்தில் மாமாவை பார்த்து சிரித்தப்படியே ஒருவர் வந்து கைக்குலுக்கினார்,மாமா எல்லோரையும் அறிமுக செய்துவிட்டு என் பக்கம் திரும்பி இவள் தான் நான் சொன்ன கீர்த்தனா என் SISTER-IN-LAW என்றார்.என்னிடம் கைக்குலுக்கிய அவர் எல்லோரையும் அழைத்து கொண்டு ஒரு அறைக்குள் சென்றார்

       அந்த அறையில் நுழைந்தவுடன் நேர் சுவற்றில் மாட்டி இருந்த ஒரு புகைப்படத்தை கண்டவுடன் என் கண்ணில் என்னை அறியாமல் கட கடவென கண்ணிர் கொட்டியது,கை கால்கள் நடுங்கியது.என் அருகில் இருந்த அப்பா ”அட இது எங்க ஊரு மாக்காயி கிழவி அவ போட்டோ எப்படி இங்க என்று கேட்க, நம்ம கீர்த்தனா எடுத்தது தான் என்று சித்தப்பா சொல்ல அக்காவும் மாமாவும் ஆமோதிக்க நான் ஓடி சென்று என் அக்காவை கட்டி கொண்டேன்,மாமாவும் அவர் நண்பரும் நான் எடுத்த மற்ற புகைப்படங்களான மாக்காயி கிழவி செங்கல் தூளை கொண்டு பல் துலக்குவது,ஊர்க்கோடியில் உள்ள சிவன் கோவில் மேல் பிரதோஷ தினத்தின்று பறக்கும் வெண் கழுகு,மயானத்தின் வாசலில் உள்ள ஹரிசந்திரன் கல்லின் பின்புறம் கண்மூடி 1,2,3 என்னும் சிவகாமி அக்கா பொன்னு ராதிகா,என ஓவ்வொன்றாக காட்டி கொண்டிருந்தனர்.இவை அனைத்தும் என் அக்காவும் மாமாவும் ஊருக்கு வரும் போது PEN DRIVE-ல் COPY பண்ணி வந்துள்ளனர்,என் அக்காவை பார்த்து “THANKS AKKA” என்றேன், இப்ப சொல்லாதே இன்னும் இருக்கு என்று பீடிகை போட்டாள்,அதற்குள் புகைப்படங்களை பார்த்துவிட்டு என் அருகில் வந்த என் அப்பா என்னம்மா இவ்வளவு நல்லா போட்டோ எடுக்கிற என் கிட்ட காட்டினதே இல்ல என்றார்,இதெல்லாம் உங்க சித்தப்பா டிரெய்னிங்கா என்றார்,நான் இல்லை அதுவே ஆர்வத்தில கத்துகிடுச்சு என்றார் பயந்தபடியே, நான் தப்பா சொல்லடா ரொம்ப நல்லா இருக்கு என்றார்.என் மாமாவின் நண்பர் அப்பாவிடம் வந்து ஒரு காசோலையை நீட்டினார், அதில் 15000 ரூ-யென குறிப்பிட்டிருந்தது என்ன இது என்றார் அப்பா உங்கள் பெண்ணின் சிறந்த 5 புகைப்படத்திற்கான பணம்,மும்பையை சேர்ந்த தனியார் இந்திய கலாச்சாரா ஆராய்ச்ச்சி நிறுவனம் கீர்த்தனாவின் படத்தை வாங்கியுள்ளார்கள் அதற்க்கான காசோலை தான் இது என்றார்.என் அப்பாவிற்கு நம்பவே முடியல,”கீர்த்தனாவிற்க்கு நல்லா PHOTOGRAPHY பேசாமா அவளே PHOTOGRAPHY படிக்க வைங்க நல்ல FUTURE இருக்கும்” என அவர் தொடங்க இதுவே சமயம் என மாமாவும் “ஆமா மாமா
எனக்கும் அதான் தோனுது” என அவரும் ஆலோசனை கூற அப்பா சற்றே குழம்பி போனார்,இதை புரிந்த கொண்ட மாமாவின் நண்பர் அவ COUNSELING ATTEND பண்ணட்டும் வேனாமினு சொல்லலே,உங்களூக்கு இந்த படிப்ப பத்தி சந்தேகம் இருந்ததுனா எனக்கு தெரிந்த நண்பர் REFOCUS ESWAR-னு CAREER COUSELLOR-அ இருக்கார் அவர்கிட்ட CONSULT பண்ணுங்க என்று அவர் கைப்பேசி 9003055643 எண்ணை கொடுத்தார்.அவருக்கு நாங்கள் அனைவரும் நன்றி சொல்லிவிட்டு கிளம்பினோம்.வரும் வழியில் இரவு  உணவை ஓட்டலில் முடித்து விட்டு வீடு திரும்பினோம்.மாமாவின் நண்பர் கொடுத்த காசோலையை கையில் வைத்து பார்த்து கொண்டிருந்தார் அப்பா,”அப்பா குழப்பமாக இருக்கிறார் போய் பேசுங்க”என்று அக்கா மாமாவை அனுப்பிவைத்தாள்.“என்ன மாமா ENGINEERING-அல்லது PHOTOGRAPHY COURSE-னு குழப்பமா இருக்கா என மாமா கேட்க “இல்ல மாப்பிள்ளை என் புள்ளைக்கு இவ்வளவு திறமையும் ஆர்வமும் இருக்கிறப்ப நான் வேற படிப்பு படிக்க வச்சா அவ திறமை வீனா போய்டும்,ஆனா இதில என்ன மாதிரி எதிர்காலம் அமையும்னு தெரியல,பெரிய பொண்ண நல்ல படிக்க வச்சு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுத்துட்டான்.சின்ன பொண்ண இப்ப விட்டுட்டானேனு சொந்தக்காரங்க சொல்லற மாதிரி ஆகிடுமோ பயமா இருக்க அதான் யோசிக்கிறேன்”என்றார், ”சரி மாமா நாளைக்கு நான் லீவு போட்டுட்டு வரேன் அந்த REFOCUS ESWAR சாரை பாக்கலாம்,அவர் என்ன சொல்றார் பாப்ப்போம் அப்புறம் முடிவெடுத்துக்கலாம்,இப்ப போய் தூங்குங்க” என்று அவர்களை சொல்லிவிட்டு என்னை போய் படுமா நளைக்கு எல்லாத்தையும் நல்லபடியா முடிச்சிடலாம் என்று கண்ணால் யாமிருக்க பயமேன் என உத்திரவாதம் கொடுத்து விட்டு படுக்க சென்றார்.

       மறுநாள் காலை REFOCUS அலுவலகத்திற்கு PHONE செய்து APPOINTMENT பெற்று 10.30 மணிக்கெல்லாம்,சென்னை சைதாப்பேட்டையில் உள்ள REFOCUS அலுவகத்தில் இருந்தோம்,எங்களுக்கு முன் இருவர் காத்து கொண்டிருந்தனர்,ஒருவர் ENGINEERING படித்து விட்டு வேலை தேடி கொண்டிருப்பவர்,மற்றொருவர் BUSINESS தொடங்க உள்ளார்,என்ன தொழில் தொடங்கலாம் என் ஆலோசனை கேட்க வந்துள்ளார்.ஒரு மணி நேரம் கழித்து எங்களுக்கு அழைப்பு வந்தது,உள்ள சென்றோம்.

       எந்த ஒரு செயலில் ஈடுபடும் பொழுது நமபிக்கையுடன் ஈடுபடவேண்டும், நம்பிக்கை நம்மிடையே குறையும் பொழுது,நமக்கு நம்பிக்கை கொடுக்க யாராவது  நம் அருகில் இருப்பார்கள்,முதலில் அவர்களுடைய முகம் தான் குறிப்பாக கண்கள் நமக்கு நம்பிக்கையும் தரும்,அப்படி ஒரு கண்கள் தான் REFOCUS ESWAR சாரிடம் பார்த்தேன்.புன்னகையுடன் வரவேற்றார் விவரங்களை கேட்டறிந்தார்.பின்னர் எங்களை பார்த்து கீர்த்தனாவிடமும், அவள் அப்பாவிடம் தனி தனியே பேச வேண்டும்,முதலில் கீர்த்தனா”என்றார்.அப்பாவும் மாமாவும் வெளியே செல்ல என்னிடம் என் ஊரில் உள்ள நண்பர்,உறவனர்கள்,பற்றி,பள்ளி படிப்பு,ஆர்வங்கள்,பொழுது போக்கு என 10 நிமிடங்கள் கேட்டறிந்தார்,பின் என் அப்பாவிடம் குடும்ப சூழல்,உறவினர்கள்,மகன்,மகள் மற்றும் அப்பாவின் PHOTOGRAPHIC COURSE பற்றிய சந்தேகங்களை கேட்டறிந்து விட்டு மீண்டும் 10 நிமிடங்களில் அழைக்கிறேன் என்றார்.பத்து நிமிடத்தில் REFOCUS ESWAR சார் அறையிலிருந்து அழைப்பு வந்தது.

அடுத்த அரை மணி நேரம்
  • PHOTOGRAPHY COURSE என்றால் என்ன?
  • CERTIFICATE COURSE,DIPLOMA AND DEGREE COURSE DETAILS
  • எங்கே படிக்கலாம்?
  • இந்தியாவில் PHOTOGRAPHIC INSTITUTE LIST
  • எவ்வளவு கட்டணம்?
  • வேலைவாய்ப்பு விவரங்கள்
  • துணை படிப்பு மற்றும் மேற்ப்படிப்பு விவரங்கள்
  • சாதனையாளர் பட்டியல் என
      
பல விவரங்களை கொடுத்தார்.விவரங்களை கேட்டு நானும் அப்பா மட்டும் அல்ல மாமாவும் அசந்து போனார்.எங்களை பார்த்து ”நான் விளக்கியதில் சந்தேகம் எதாவது இருந்தால் கேளுங்கள் என்றார்,உடனே அப்பா எனக்கு என்னவெல்லாம் சந்தேகம் இருந்ததோ அத்தனைக்கும் எங்களுக்கு விடை கிடைத்து விட்டது சார்,மிகவும் நன்றி சார் என் பெண்ணை ENGINEERING சேர்க்கலாம் என்று தான் சென்னை வந்தேன். இனி அவளுக்கு பிடித்த PHOTOGRAPHY துறையில் போக நான் முழு சம்மதமும்,அதில் அவள் சாதிக்க தேவையான வழிமுறைகளையும் செய்து தருவேன் என்று கூறி என் கையை ஆதரவாக பிடித்தார், நான் REFOCUS ESWAR சாரையும்,என் மாமாவியும் நன்றி பெருக்குடன் பார்த்து கொண்டே என் அப்பாவின் தோளில் சாய்ந்து கொண்டேன்.
       அடுத்த ஒரு மாதத்தில் சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் PHOTOGRAPHIC INSTITUTE-ல BASIC AND ADVANCED PHOTOGRAPHY COURSE-ல் சேர்ந்தேன் மேலும் சென்னை மகளீர் கல்லூரி ஒன்றில் B.Sc (VISUAL COMMUNICATION) சேர்ந்து படித்து முடித்து இப்பொழுது சென்னையில் உள்ள மூன்று WEB DEVELOPMENT AND IMAGE PROCESSING COMPANY-களுக்கு FREELANCING PHOTOGRAPHER-அ வேலை செய்கிறேன். நல்ல வருமானம்,மன நிறைவு,நிறைய FREE TIME கிடைக்குது நண்பர்களோட பேச என் CAREER-யை UPDATE செய்ய என.

       அவ்வளாவு தான் ப்ரண்ட்ஸ் என்ன பத்தி சொல்ல இப்ப சொல்லுங்க நான் கண்ட கனவு நினைவாகும் போது விஸ்வா கனவு நினைவாகதா? முயற்சி செஞ்சா LAPTOP,AC CABIN,FAZER BIKE,WEEKEND ECR RIDING,COCK TAIL PARTY கூடவே  நடிகை சமந்தா போல இருக்கிற பக்கத்து வீட்டு பொண்ணு,எல்லாம் கிடைக்கும் தானே……நீங்க விஸ்வாக்கு கொஞ்சம் சொல்லுங்க முயற்சி பண்ண சொல்லி,அப்படி இல்லனா REFOCUS ESWAR சார் கிட்ட CONSULT பண்ண சொல்லுங்க.OK-va..எப்படி சொல்றது கேட்கிறிங்களா…இந்த ARTICLEக்கு COMMENT பண்ணுங்க போது..EASY-ya விஸ்வாக்கு போயிடும்.BYE FRIENDS.
-->

Friday, 12 October 2012

என் ஆள பத்தி சொல்லனும்னா ஒரே வரியில் சொல்லிடலாம்

      கைக்கடிகாரத்தை பார்த்தேன்  மாலை 5.40 LAPTOP-யை SHUTDOWN செய்தேன்,என் அலுவலக கேபின் AC-யை அணைத்து விட்டு,செக்ரியுட்டி LOGOUT செய்து வெளியே வந்தேன்.மறையும் சமயத்திலும் கதிரவன் இயற்க்கை வளங்களை அழித்த மனித குலத்தை தன் அக்னி பார்வையால் எரித்து கொண்டிருந்தான், திரும்பி உள்ளே சென்று விடலாம் என்று நினைத்த பொழுது என் MOBILE செல்லமாக சினிங்கியது,செல்லமாக சினிங்கியது என்றவுடன் கண்டு பிடுத்திருப்பிர்கள்

yamaha fazer

யாருடைய அழைப்பு என்று சந்தேகமே வேண்டாம் என் காதலியே தான்,”கிளம்பியாச்சா..?” என்றாள்,”இதோ கிளம்பி வாசலில் தான் நிக்றேன்” என்றேன்.”சரி நானும் கிளம்பிட்டேன் இன்னும் 30 நிமிஷத்தில நாம USUAL-ல MEET பண்ணற எடத்துக்கு வந்துட்றேன்” என்றதும் என் செல்போன் அணைத்து விட்டு OFFICE BASEMENT PARKING AREA-விலிருந்து  என் FAZER BIKE-யை எடுத்து கொண்டு அலுவல வளாகத்தை விட்டு வெளியே வந்தேன்,அருகில் இருக்கும் சுப்பு அண்ணா பொட்டி கடையில் ஒரு KINGS வாங்கி நிதானமாக தம் அடித்தேன்,"என்னடா இவன் LOVER வர சொல்லிட்டு நின்னு தம் அடிக்கிறானு பாக்கிறங்களா BOSS" நாங்க MEET பணற எடம் அவ OFFICE-லிருந்து 30 நிமிஷம் ,எனக்கு 5 நிமிஷம் தான் ஆகும் அதான் சின்னதா ஒரு தம் அடிச்ச கையோட ஒரு BOOMER வாங்கி வாயில போட்டேன்,FAZER-யை START செய்து சின்னதா ஒரு WHEELING SCENE-அ போட்டு 5 வது நிமிடத்தில் நாங்க MEET பன்ற COFFEE SHOP-ல் ஒரு டேபிள் பார்த்து உட்காந்தேன்.

      அந்த டேபிள் IN-CHARGE தூர இருந்து கை காட்டினார்,அவருக்கு தெரியும் நான் காத்திருப்பது யாருக்கென்று,சரியாக 18 வது நிமிடம் என் தேவதையின் SCOOTY STREAK-ன் INDICATOR சத்தம், என் ரத்த நாளங்களில் சிறு இசை

tvs scooty

அதிர்வை உருவாக்கியது.அதெல்லாம் சரி இவ்வளவு BUILD-UP கொடுக்குறேனே இவன் ஆளு எப்படி இருக்கும் தான் நினைக்கிறீங்க...உங்க MIND VOICE-யை எப்படி புடிச்சேன் பாத்தீங்களா..BOSS.

     என் ஆள பத்தி சொல்லனும்னா ஒரே வரியில் சொல்லிடலாம் பாஸ்,நடிகை சமந்தா எங்க பக்கத்து வீட்டு பொண்ணா இருந்தா எப்படி

.
506073_CUSTOMIZATION

அழகா,எளிமையா இருப்பாங்களோ அப்படி தான் இருப்பா,பெயர் கீர்த்தனா,இப்ப சொல்லுங்க நான் காத்திருப்பது நியாயம் தானே,OK....OK,அவ டேபிள் கிட்ட வந்துட்டா.....”ஹாய் கீர்த்து”என்றேன்.என் எதிரே வந்து அமர்ந்தாள்,என்னை சுற்றி ஒரு ஒளி வட்டம்வந்திறங்கியது,சுற்றி அமர்துள்ள அத்தனை பசங்களையும் ஒரு திமிரான பார்வை பார்த்தேன்.அவள் ”ஹாய்” என்றதும் நான் சுய உணர்வுக்கு திரும்பினேன்,டேபிள் IN-CHARGE அருகில் வந்தார், அவளுக்கு பிடித்த TROPICAL ICEBERG என்ற COLD COFFEE-யை ORDER செய்தேன்

samantha actressof kollywood

     அரை மணி நேரம் அவள் அம்மாவின் மோர் குழம்பு,அக்கா குழந்தை இவள் மடியில் உச்சா போன கதை,அவள் அண்ணண் பிகரை பற்றி புலம்பல்,அவள் அப்பாவின் BUSINESS பற்றி பீத்தல் என ஓடியது,என்னடா இவன் இந்த ஃபிகரு இவ்வளவு மோக்கை போடுது இவன் சும்மா இருக்கானேனு பாக்கிறிங்களா, நம்ம மூஞ்சிக்கு இந்த மாதிரி ஃபிகர் மாட்டிறதே பெரிய விஷயம்,இப்படி ஒப்பேத்தினா தானே முடியம்.
     கிளம்பட்டுமா என குரல் கேட்டு சுய நினைவுக்கு வந்தேன்,OK DEAR SEE YOU TOMORROW என மனசில்லாமல் விடைக்கொடுத்தேன்,என் மனதை புரிந்த கொண்ட அவள் ஆதரவாக என் உள்ளங்கையில் யாருக்கும் தெரியாமல் அவளின் இரு கைளை அழுத்தி விடைக்கொடுத்தாள்.அவளின் அந்த பிரியா விடையின் உணர்வு FREEZER-ல இருந்து எடுத்த KINGFSHER LAGER BEER-யை அப்படி OPEN பண்ணி வாயில வச்ச மாதிரி சில்லுனு இருந்திச்சு.அவளின் SCOOTY STREAK COFFEE SHOP-ன் PARKING LOUNGE-யை விட்டு வெளியேறிய பின் தான் அந்த சில்லன்ற உணர்வு நீங்கியது போல் தோன்றியது.

     திடிரென மிண்டும் அதே சில்லென்ற உணர்வு ஆனால் அதை விட வேகமாக என் முகத்தில் மோதியது கூடவே வசை மொழி வேறு “டேய் மூதேவி எழுந்திரு INTERVIEW-க்கு நேரமாச்சு,எதிரே என் ROOM MATE WATER JUG-வோட  நின்று இருந்தான்”என்னடா கனவா,பக்கத்து வீட்டு சமந்தா வந்தாளா? ...”ம் ” என்றேன்..ஏன் உனக்கு எதிர் வீட்டு சமந்தா வந்தாளா என்றேன்..அதற்கு அவன் “ம்ம்...”என்றான்.OK எழுந்திரு INTERVIEW போய்ட்டு வந்து கனவு காணலாம் என்றான்.


பின் குறிப்பு :
என்ன பாஸ் குழப்பமா இருக்கா நாங்க யாருனு நினைக்கிறிங்க HIGH CLASS FAMILY-யோட போட்டியும் போட முடியாம,LOW CLASS FAMILY மாதிரி ADJUST பண்ணி வாழ தெரியாம,ஒரே NIGHT-ல அண்ணாமலை ரஜினி சார் மாதிரி,ENGINEERING  படித்த
நம்ம பையன் வாழ்க்கை மாறிடும்-னும் பக்க்த்து வீட்டு காரன், எதிரி வீட்டுக்காரன்,அலுவலக மேலாளர்,அலுவலக நண்பர்,என பலர் சொன்னதை கேட்டு நம்ம பையனுக்கு என்ன படிப்பு வரும்னு யோசிக்காம,கடன் வாங்கி,தோப்ப வித்து படிக்க வெச்ச அப்பா அம்மாவிற்கு பிறந்து, BE,B.TECH படித்தால் AC CABIN,FAZER BIKE,SUPER FIGURE,WEEKEND ECR RIDING,COCKTAIL PARTY,அப்படி எல்லாம் ஜாலியா LIFE-அ ENJOY பண்ணலாம் என கற்பனை உலகத்தில பொழுது கழிக்கும் "ENGINEERING படித்தும் வேலையில்லா பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள்.
  
இந்த சங்க உறுப்பினர்களின் பகிர்வுகள் மிண்டும் தொடரும்

நன்றி வணக்கம்
விஸ்வாமித்ரன்

மாற்றான்

ஹாய் பிரெண்ட்ஸ்,நம்ம மூலக்கடையில் உள்ள சண்முகா திரையரங்கில் இன்னைக்கு மாற்றான் படம் ரீலீஸ் ஆகிறது. நீங்க போகலையா!...நான் உங்களுக்கு ஒரு செய்தி சொல்லபோறேன். நம்ம சண்முகா திரையரங்கில் வெளியாகி உள்ளதால் சூர்யா ரசிகர்கள் சண்முகா திரையரகின் என்ட்ரன்சில் விதவிதமான போஸ்டர்கள் மற்றும் பேனர்ஸ்   வைத்திருப்பதை நாம் பார்க்கலாம். ஒரே திருவிழா கோலமாக இருக்கும். ஓகே பிரெண்ட்ஸ் உங்களுக்கும் பார்க்கணும்னு ஆவலா இருக்கா  உடனே நம்ம மூலக்கடையில் இருக்கும் சண்முகாவுக்கு வாங்க. என்ன பண்றீங்க  பேஸ் புக்கில் சாட் பண்ணிக்கொண்டிருக்கும் அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை,மார்களே நீங்க எல்லாரும்  சண்முகாவுக்கு  போய் இன்னறைக்கு வெளியாகி உள்ள மாற்றான் திரைப்படத்தை பாருங்க... மாற்றான்  திரைப்படம் சூப்பரா    வெளியாகி கொண்டிருகிறது. 1st half  அதிரட்டி.. 2nd half சரவெடி சோ என்ஜாய் எவெரி ஒன்.

யார் இவர் ?

யார் இவர் ?


clue : இவர் ஒரு விளையாட்டு துறையை சேர்ந்த பிரபலம்

இவர் மிக சிறிய வயதில் தன் தனி திறமையால் பிரபலமாகி பல விருதுகளை பெற்றவர் இவர் யார்?

கண்டுபிடியுங்கள் பாபா கவுன்ட் ஸ்டார்ட்.

(நண்பர்களே இந்த வலைத்தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சென்னை ப்ரண்டுஸ்கு மறக்காமல் லைக் குடுக்கவும்)

விஜய் வாழ்க்கை குறிப்பு :

விஜய் வாழ்க்கை குறிப்பு :


நடிகர் பெயர் : விஜய்

செல்ல பெயர் : இளையதளபதி


நடிகர் முழு பெயர் : ஜோசப் விஜய் சந்திரசேகர்

குடும்பம்:

அப்பா : சந்திரசேகர்

அம்மா : ஷோபா சந்திரசேகர்

மனைவி : சங்கீதா

பிள்ளை : ஜேசன் சஞ்சய் , திவ்யா சாஷா

தேசியம் : இந்தியன்

கண் நிறம் : பிரவுன்

கல்லூரி : சென்னை லயோலா கல்லூரி

பிறந்த நாள் : ஜூன் 22, 1974

முதல் படம் : நாளைய தீர்ப்பு

விருதுகள் : கலைமாமணி விருது 1998, தமிழ் நாடு சிறந்த கதாநாயகன் விருது 1997, காதலுக்கு மரியாதை படத்திற்காக.

ஜோசப் விஜய் சந்திரசேகர் ஒரு இந்திய திரைப்பட நடிகர்.

விஜய் ஆரம்பகாலத்தில் தமிழ் திரையுலகில் குழந்தை கதாபாத்திரத்தில் தோன்றி நடித்துவந்தார். தமிழ் திரைஉலகில்  5வருடம் கழித்து சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துவந்தார்.
1996 வெளிவந்த பூவே உனக்காக திரைப்படம் இவரை திரைலமே திரும்பி பார்க்கவைதது.

அதன் பிறகு விஜய் அடுத்தடுது பல வெற்றி படங்களை தந்து 40ற்கும் மேற்பட்ட படங்களை நடித்துவந்த இவருக்கு 1996 ஆம் வருடம் பெருமதிப்புடைய இளையதளபதி என்ற தலைப்பு வழங்கபட்டது.

இந்த தலைப்பு இபோது அணைத்து படத்திற்கு அவர் பெயர் முன்பு குறிப்பிட்டு வருகிறது. விஜய் தற்போது மிகப்புகழ் பெற்ற மூன்றாவது நடிகராக உள்ளார் தமிழ் திரைஉலகில் ரஜினிகாந்த்  மற்றும் கமல்ஹாசன் அவர்களுக்கு பிறகு.


இவர் தமிழ் திரையுலகில் முன்னுக்கு வருவதற்கு இவர் குடும்பமும் ஒரு முக்கியகாரணம். அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர், அம்மா ஷோபா சந்திரசேகர் திரையுலக பின்னணி பாடகி ஆவார்.

இவர் பெரும்பாலும் அதிக தொகை படங்கள், மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்கள், மற்றும் காதல், அதிரடி கதாபாத்திரங்களில் நடித்துவந்தார்.

இவரது மிகவும் புகழ் பெற்ற படங்கள் பூவே உனக்காக 1996, காதலுக்கு மரியாதை 1997, கில்லி 2004, போகிரி 2007, நண்பன் 2012.

விஜய் முதன்முதலில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்த படம் வெற்றி. பிறகு அவர் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் நாளைய தீர்ப்பு.  விஜய்யின் வெற்றி படங்கள் பூவே உனக்காக, நேருக்கு நேர், லவ் டுடே, ஒன்ஸ் மோர், காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல், துள்ளாத மனமும் துள்ளும், குஷி, கில்லி, போக்கிரி, காவலன், மற்றும் நண்பன்.

இவர் பலருக்கு உதவி வருவதாலும், சமூக சேவைகளில் ஈடுபடுவதாலும்  இவர் பலராலும் அடுத்த  சூப்பர் ஸ்டார் எனவும் பலர் கூறுகின்றனர்.

அதுமட்டுமல்லாது விஜய் கொக்க கோல, சன் பீஸ்ட், டோகோமோ மற்றும் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார் இவர் மிக சிறிய வயதிலேயே தேன் இந்தியாவின் உயரிய விருதான எம்.ஜி.ஆர், மற்றும் கலைமாமணி, விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தமிழகம் மட்டும்மல்லாது கேரளா மற்றும் உலகெங்கும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

நன்றி

என்றும் அன்புடேன்

சத்யா 









Thursday, 11 October 2012

தத்துவம் மச்சி...



லவ்.... என்பது ரோட்ல கிடக்குற                       ரூபா நோட் மாதிரி....
தொலைச்சவன் feel பண்ணுவான்
கிடைச்சவன் enjoy பண்ணுவான் 
                                                     
                    ஜான்சியின் தத்துவம்  

Don’t fall in லவ்....



Girls - லவ்:                                  
                 
1st day – ஹாய்!

2nd day- ஹொவ் ஆர் யு? 
3rd day- நான் ஒன்னு சொல்லுவேன் கோவப்படக்கூடாது  

4th day- ஐ லவ் யு 

5th day-நீ இல்லாம ஒரு நொடிக்க்கூட என்னால வாழ முடியாதுடா 

6th day- சாரி டா, 2 days ah……. உன்ன பார்க்க என்னால வரமுடியல 

7th day- Really very very  sorry da..எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்க    

                              Bye da…….
-------------------------------------------------------------------------------------------
Boys – லவ்:      





8th day-  கன்னத்துல தாடி        

9th day- வாயில பீடி 

10th day- சோகத்துல குடி 

11th day- ரோட்டுல பாடி 


ஸ்டார்ட் தி மியூசிக்…… 


வேணாம் மச்சான் வேணாம்.... இந்த பொண்ணுக காதலு.....

                 

சாட்டை - நம் சமுகத்தின் மேல் சுழல்கிறது

அனைவரையும் நெகிழ வைத்த சாட்டை:


சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பினரையும் முக்கியமாக மாணவர்களை கவர்ந்து சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் சாட்டை படத்தை பார்த்தேன்.

ஷாலோம் க்ரியேஷன்ஸ் தயாரிப்பில், அன்பழகன் இயக்கத்தில், சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் சாட்டை.

சாட்டை திறைகளமானது ஒரு ஆசியருக்கும் மாணவனுக்கும் இடையே இருக்க வேண்டிய நல்ல உறவுமுறையை எடுத்துரைக்கும்  படம். இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்கள் நடத்தும் எந்திரத்தனமான வகுப்புகளும், தனது பள்ளி நல்ல ரிசல்ட் தரவேண்டும் என்பதற்க்காக கண்டிப்பு என்ற பெயரிலும், விதிகள் என்ற பெயரிலும் மாணவர்களை மிருகத்தனமாக நடத்தும் சில பள்ளி மற்றும் ஆசிரியர்களால் மாணவர்களின் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்படுகின்றது என்பதை சுட்டிகாட்டியிருக்கும் திரைபடம். இது ஒரு சராசரி திரைப்படம் அல்ல ஒவ்வொரு மாணவனின் உணர்ச்சி, இப்படத்தில் சமுத்திரக்கனி ஒரு பள்ளி ஆசியராகவே வாழ்ந்துள்ளார். முக்கியமாக ஒரு காட்சியில் பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் தன்னை கேலி செய்வதால் அந்த மாணவியால் சரியாக படிக்க இயலாமல் திக்கி திக்கி படிப்பதை உணர்ந்த சமுத்திரக்கனி இது நீ நினைக்கும் அளவிற்கு பெரிய பிரச்சனை ஏதும் இல்லை பயிற்சி செய்தால் சரியாகிவிடும் என்று கூறி ஸ்பீட் ப்ராக்டிஸ் என்ற முறையான பயிற்சி அளிப்பார், ஒரு காட்சியில் சமுத்திரக்கனியின் பயிற்சி முறைகளை பிடிக்காத உதவி தலைமை ஆசிரியர் தம்பிராமையா,சமுத்திரகனியை அவமானப்படுத்த அந்த மாணவியை படிக்குமாறு கூறுவார் அந்த மாணவி சற்றும் எதிர் பாராமல் அதிவேகமாக வாசிக்க மாணவர்கள் கைத்தட்டும் காட்சியில் அரங்கமே அதிருகிறது. தெரியாத விஷயங்களை கற்றுக்கொள்ளும் பாசிடிவ் முயற்சி என மாணவர்கள் போக்கிலேயே சென்று சக நண்பராக ஒரு ஆசிரியர் இருந்தால் மட்டுமே நல்ல வெற்றி காணமுடியும் என அறிவுருத்தும் படம்.

பள்ளி பருவத்தில் சக மாணவர்களிடம் ஏற்படும் காதல். ஆசிரியர் காட்டும் அன்பிற்கும் பாசத்திற்கு முன் காதல் தோற்று படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வைக்கும் காரணம் நல்ல ஆசிரியரின் அணுகுமுறை.

இறுதியில் ஒரு சிறந்த ஆசிரியர் என்பவர், நல்ல நண்பர் மற்றும் சக மாணவனாக வாழவேண்டும் அப்படி வாழ்தால் மாணவர்கள் அனைத்தையும் கற்று அறிந்த சகலகலா வல்லவனாக மாற முடியும் என்றும் அப்பொழுது தான் இந்த சமுகத்திற்கு ஒரு சிறந்த மாணவனை கொடுக்கமுடியும் அந்த மாணவன் நாளைய இந்தியாவின் சிறந்த குடிமகனாக திகழமுடியும் என்பதை கற்பிக்கும் திரைப்படம்.

நீண்ட நாட்களுகு பிறகு நான் பார்த்த மிக  நல்ல திரைப்படம். அனைவரும் குடும்பத்தோடு மாணரவர்களோடு பார்க்கவேண்டிய படம்

நன்றி என்றும் அன்புடன்

சத்யா.


Tuesday, 9 October 2012

முதியோர் இல்லத்தில் அம்மா

சத்யன் கவிதைகள்:

"டி.வி செய்தியில் இன்று புயல் சின்ன அறிக்கை 

அலுவலகம் சென்றிருக்கும் தன் மகன் பத்திரமாக வீடு சேர 

கடவுளிடம் பிராத்தனை செய்து கொண்டிருந்தாள் அம்மா,
.
.
.
.
முதியோர் இல்லத்தில்".






அதில ஒன்னு ரெண்டு பிகரு நம்மள மாதிரி FEELING-ஓட எதிர் பார்த்து ஒரு பார்வை பாக்கும் பாருங்க. -PART 1

        நான் கிருஷ்ணா SOFTWARE PROGRAMMER -ஆக USA, New Jersey மாகானத்தில் 6 ஆண்டுகளாக பணிப்புரிந்து வருகிறேன்,ன் நான் படித்து வளர்ந்தது எல்லாம் சென்னை தான்.என் இளம் வயதின் சொர்க்கம்.வீடு இருந்தது குரோம்பேட்டை,
பள்ளி படிப்பு பல்லாவரம் மறைமலையடிகளார் பள்ளி,பின் கல்லூரி படிப்பு 
மீனம்பாக்கத்தில் உள்ள A.M.JAIN COLLEGE.


       A.M.JAIN COLLEGE-ல் 1989 ஆம் ஆண்டு முதல் 1992 வரை B.Sc (Maths) Group-ல் படித்தேன் உண்மையாகவே அது ஒரு கனா காலம்..காலேஜ் சேர்ந்த உடன் பெரிய ஆள் ஆகிவிட்டாத ஒரு நினைப்பு வரும் பாருங்க..அட அட..அடா அந்த சுகமே தனி ...முதல் தடவையா UNIFORM இல்லாம வேற படிக்க போறோமா,விஷேச நாட்களில் கலர் DRESS போட்டாலே நாலு பிகரு பாக்கிற மாதிரி சுத்துவோம்,காலேஜ் நுழைஞ்சவுடன் தினம் கலர் கலரா புது DRESS கேக்கவா வேனும்.அதுவும் TRAIN 4 STATION தள்ளி போய் படிக்கிற சந்தோஷம்,குரோம்பேட்டை,பல்லாவரம்,மீனம்ப்பாக்கம் வித விதமா,கலர் கலரா பொன்னுங்க...சந்தோஷம் தாள முடியாம ஒரே மாசத்திலே 2 கிலோ வெய்ட்போட்டேன்..அதுவும் குரோம்பேட்டை வைஷ்னவா காலேஜ் பொன்னுங்க சும்மா தேவதை மாதிரி பாவடை தாவனியில ROAD CROSS பண்ண நிப்பாங்க,அதில ஒன்னு ரெண்டு பிகரு நம்மள மாதிரி FEELING-ஓட எதிர் பார்த்து ஒரு  பார்வை பாக்கும் பாருங்க.வயத்திலிருந்து ஆரம்பிச்சு நெஞ்சு,கழுத்து,காது,கண் வழியா உச்சி மண்டைக்கு ஒரு வேகமா ஒரு பூச்சி ஒடும் பாருங்க அந்த நேரம் உலகத்திலியே நாம தான் ரொம்ப அழகு நினைப்பு வரும்,அந்த பொன்னு தான் நம்ம LIFE PARTNER, நம்ம அம்மாவோடமருமக-னு ஒரு கற்பனை வரும்.

அதே மூடோட RAILWAY STATION போனா..அங்க MCC College MODERN FIGURE-சும்மா நிக்கும் பாருங்க அத பார்த்த உடனே தாவனி போட்ட பிகரு அப்படியே ERASE ஆகி ஜீன்ஸும் சூரிதார் போட்ட பிகரு கூட TRENDY BIKE-ல சுத்தர கற்பனை சும்ம ரெக்கை கட்டி பறக்கும். இப்படி ஒரு அரை மணி நேரம் STATION-ல  பொழுது போகும்.
அதுக்கு  அப்புறம் காலேஜ்க்கு TRAIN புடிச்சி மீனம்பாக்கம் வந்து இறங்கின புழுதி படிஞ்சு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வறண்டு போயி பாலைவனமா காட்சி தரும் மீனம்ப்பாக்கம் RAILWAY STATION,(இப்ப மாதிரி CO-ED இல்லை அப்ப),அந்த் வரண்ட காட்சியை காண விரும்பாமல்,விடு விடு என்று காலேஜ் உள்ள வேகமா நுழைச்சுடுவோம்...

                                                                                         இன்னும் விரியும்.....

தத்துவம் மச்சி தத்துவம்:

தத்துவம் மச்சி தத்துவம்:

தத்துவம் no.12002:


"நல்லவங்களுக்கு நல்லது உடனே நடக்காது 

கெட்டவங்களுக்கு கெட்டது உடனே நடக்காது". 

தத்துவம் - Swaleeha Jaan 

Monday, 8 October 2012

FACE BOOK-ல் பிச்சைகாரர்....


என்னபா ராப்பிச்சை  நேத்து 
 ஆளையே காணும்"?

"எனக்கு வயறு சரியில்லை"  
நான்தான் வரலைன்னு உங்க எல்லாருக்கும் FB-ல க்ருப் மெஸேஜ் 
பண்ணியிருந்தேனே கவனிக்கலையா............?

தத்துவம் மச்சி தத்துவம்

ஹாய் சென்னை ப்ரண்ட்ஸ் உங்களுக்கெல்லாம் ஒரு சந்தோசமான செய்தி சொல்லபோறேன். இன்று முதல் உங்கள் சத்யா வின்

தத்துவம் மச்சி தத்துவம் வெளியாக உள்ளது. நீங்களும் உங்களது தத்துவங்களை எங்களுக்கு அனுப்பி வைக்கலாம் அதை நாங்க உங்க சென்னை ப்ரண்ட்ஸ் வலைதளத்தில் நீங்களும் பதிவு செய்யலாம். அதுக்கு நீங்க செய்ய வேண்டியதெல்லாம் ஒன்னுதாங்க உங்களோட தத்துவங்கள எங்க (chennaifrienz@gmail.com) என்ற முகவரிக்கு போஸ்ட் பண்ணுங்க. அதுமட்டுமில்லைங்க தேர்ந்தேடுக்கபடும் சிறந்த தத்துவத்துக்கு பரிசும் தறாங்க அப்புறம் என்ன ஸ்டார்ட் பண்ணுங்க.

தத்துவம் no.12001:


"பிகர் கிடைகலேன்னு வாழ்க்கைல ரொம்ப வாடாதே 

அதே பிகர மடிசிட்டேன்னா வாழ்க்கைல ரொம்ப ஆடாதே".

என்னமா வேண்றாபா ......!

"பரீட்சைக்கு போகும்போது அப்படியென்ன
சாமிக்கிட்ட  வேண்டிக்கிட்ட?"
  "எனக்கு முன்னால் உட்க்கார்ந்து பரீட்சை எழுதுகிறவன்
எல்லா கேள்விக்கும் சரியான விடை எழுதணும்னனுதான்."

Saturday, 6 October 2012

கொலை

சத்யன் கவிதைகள்:


"அன்பே இவ்வுலகில் என்னைக்

 கொல்ல வேறெந்த

 ஆயுதத்தாலும் முடியாது  

 உன் விழியை தவிர".

காதல் கவிதை

சத்யன் கவிதைகள் :


"பள்ளி சிறுவர்களுக்கு விடுமுறை உண்டு தேர்வு இறுதியில்..

அலுவலர்களுக்கு விடுமுறை உண்டு வார இறுதியில்...

அட! வான் நிலவிற்கு கூட விடுமுறை உண்டு அமாவாசையில்..

சூரியனுக்கும் விடுமுறை உண்டு
இரவு நேரத்தில்....

எந்தன் மூச்சிற்கும்  விடுமுறை உண்டு
மரணத்தில்....

"பெண்ணே உன் நினைவுகளுக்கு மட்டும் என்றென்றும் விடுமுறை இல்லை
.
.
.
.
.எனது நாளேட்டில்...

Friday, 5 October 2012

முடிவுக்கு வந்தது துப்பாக்கி பிரச்னை

"துப்பாக்கி" பட பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.


ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடிக்கும் படம், "துப்பாக்கி", இந்த பட தலைப்புக்கு "கள்ளதுப்பாகி" பட தயாரிப்பாளர் ரவிதேவன் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்து வந்தார். கோர்ட் "துப்பாக்கி" என்ற தலைப்புக்கு இடைக்கால தடை  விதித்தது. இந்த தடையை நீக்ககோரி "துப்பாக்கி" படத் தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ரவிதேவன் சென்னை உதவி சிட்டி கோர்டில் வழக்கு தொடர்ந்ததால் எஸ். தாணு அங்கு தான் மனு தாக்கல் செய்ய  
வேண்டும் என்று ஐகோர்ட் கூறியது, இதையடுத்து அங்கு வழக்கு விசாரணை நேற்று நடந்தது. வழக்கை சிட்டி கோர்ட் மேலும் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ், கள்ளதுப்பகி இயக்குனரிடம் கேட்டுகொண்டதற்கிணங்க, இத்தலைப்பு விட்டுகொடுகபட்டதாக கூறப்படுகின்றது. இது பற்றி ரவிதேவன் கூறியது ஏ.ஆர். முருகதாஸ் ஒரு நல்ல இயக்குனர் அவர் பிரச்சனையை புரிந்துகொண்டு இப்பிரச்சனை முடிவுக்கு வந்தது என்றார்.

இந்நிலையில் "துப்பாக்கி" பட டிரைலர் வருகின்ற 10ஆம் தேதி அன்றும்,

பாடல் வெளியீடு வருகின்ற 11ஆம் தேதி அன்றும்,

துப்பாக்கி திரைப்படம் தீபாவளி அன்றும் வெளிவருவது உறுதியானது.

இனி இளையதளபதியின் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

தீபாவளி அன்று இளையதளபதியின் சரவெடியாய் "துப்பாக்கி" 

செய்திகள் WJ. சத்யா 

  

இன்றைய பயணம் மாதா கல்வி குடும்பத்திலிருந்து.......ஜான்சி


ஹாய் ப்ரிண்ட்ஸ், என் பெயர் ஜான்சி,மீண்டும் பயணத்தை ஆரம்பிப்போமா?...நான் ஒருநாள் குன்றத்தூரில் உள்ள என்னுடைய உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன் அப்பொழுது என்னுடைய உறவினர் ஒருவர் பல் வலியால் மிகவும் அவதிபட்டுக்கொண்டிருந்தார்.... அப்பொழுது  நான் என் நண்பர்களிடம் சென்று, பல் மருத்துவமனை எங்கே இருக்கிறது? எங்கே நல்ல சிகிச்சை அளிகின்றார்கள் என்று விசாரித்தேன்.... அதற்கு என் நண்பர், குன்றத்துரிலேயே கடந்த ஐந்து வருடங்களாக செயல்பட்டுக்கொண்டிருக்கும்  மாதா பல் மருத்துவ கல்லுரி மற்றும் மருத்துவமனையில் 
 சிறப்பான  சிகிச்சை அளிக்கிறார்கள் என்று கூறினார் உடனே நாங்கள் சிகிச்சைக்காக அங்கு சென்றோம்.அங்கே எல்லாவிதமான பல் சம்மந்தப்பட்ட treatments அளித்து வருகிறார்கள்.தினம்தோறும்  ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட patients வந்து சிறப்பான முறையில் சிகிச்சை பெற்று மகிழ்ச்சியுடன் செல்கிறார்கள்...மாதாவின் அருளால் மாதா பல் மருத்துவ கல்லுரி மற்றும் மருத்துவமனை இன்னும் மேலோங்கி நிற்க மாதாவை பிராத்திக்கிறோம் ..ஓகே ப்ரிண்ட்ஸ் மாதாவின் பல் மருத்துவமனையை இந்த பயணத்தில் பார்த்தோம்... 

மீண்டும் ஜான்சியின் பயணம்  தொடரும்.....