"துப்பாக்கி" பட பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடிக்கும் படம், "துப்பாக்கி", இந்த பட தலைப்புக்கு "கள்ளதுப்பாகி" பட தயாரிப்பாளர் ரவிதேவன் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்து வந்தார். கோர்ட் "துப்பாக்கி" என்ற தலைப்புக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த தடையை நீக்ககோரி "துப்பாக்கி" படத் தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ரவிதேவன் சென்னை உதவி சிட்டி கோர்டில் வழக்கு தொடர்ந்ததால் எஸ். தாணு அங்கு தான் மனு தாக்கல் செய்ய
வேண்டும் என்று ஐகோர்ட் கூறியது, இதையடுத்து அங்கு வழக்கு விசாரணை நேற்று நடந்தது. வழக்கை சிட்டி கோர்ட் மேலும் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ், கள்ளதுப்பகி இயக்குனரிடம் கேட்டுகொண்டதற்கிணங்க, இத்தலைப்பு விட்டுகொடுகபட்டதாக கூறப்படுகின்றது. இது பற்றி ரவிதேவன் கூறியது ஏ.ஆர். முருகதாஸ் ஒரு நல்ல இயக்குனர் அவர் பிரச்சனையை புரிந்துகொண்டு இப்பிரச்சனை முடிவுக்கு வந்தது என்றார்.
இந்நிலையில் "துப்பாக்கி" பட டிரைலர் வருகின்ற 10ஆம் தேதி அன்றும்,
பாடல் வெளியீடு வருகின்ற 11ஆம் தேதி அன்றும்,
துப்பாக்கி திரைப்படம் தீபாவளி அன்றும் வெளிவருவது உறுதியானது.
இனி இளையதளபதியின் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.
தீபாவளி அன்று இளையதளபதியின் சரவெடியாய் "துப்பாக்கி"
செய்திகள் WJ. சத்யா
No comments:
Post a Comment