Chennai Friends in Facebook

Thursday, 11 October 2012

சாட்டை - நம் சமுகத்தின் மேல் சுழல்கிறது

அனைவரையும் நெகிழ வைத்த சாட்டை:


சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பினரையும் முக்கியமாக மாணவர்களை கவர்ந்து சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் சாட்டை படத்தை பார்த்தேன்.

ஷாலோம் க்ரியேஷன்ஸ் தயாரிப்பில், அன்பழகன் இயக்கத்தில், சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் சாட்டை.

சாட்டை திறைகளமானது ஒரு ஆசியருக்கும் மாணவனுக்கும் இடையே இருக்க வேண்டிய நல்ல உறவுமுறையை எடுத்துரைக்கும்  படம். இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்கள் நடத்தும் எந்திரத்தனமான வகுப்புகளும், தனது பள்ளி நல்ல ரிசல்ட் தரவேண்டும் என்பதற்க்காக கண்டிப்பு என்ற பெயரிலும், விதிகள் என்ற பெயரிலும் மாணவர்களை மிருகத்தனமாக நடத்தும் சில பள்ளி மற்றும் ஆசிரியர்களால் மாணவர்களின் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்படுகின்றது என்பதை சுட்டிகாட்டியிருக்கும் திரைபடம். இது ஒரு சராசரி திரைப்படம் அல்ல ஒவ்வொரு மாணவனின் உணர்ச்சி, இப்படத்தில் சமுத்திரக்கனி ஒரு பள்ளி ஆசியராகவே வாழ்ந்துள்ளார். முக்கியமாக ஒரு காட்சியில் பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் தன்னை கேலி செய்வதால் அந்த மாணவியால் சரியாக படிக்க இயலாமல் திக்கி திக்கி படிப்பதை உணர்ந்த சமுத்திரக்கனி இது நீ நினைக்கும் அளவிற்கு பெரிய பிரச்சனை ஏதும் இல்லை பயிற்சி செய்தால் சரியாகிவிடும் என்று கூறி ஸ்பீட் ப்ராக்டிஸ் என்ற முறையான பயிற்சி அளிப்பார், ஒரு காட்சியில் சமுத்திரக்கனியின் பயிற்சி முறைகளை பிடிக்காத உதவி தலைமை ஆசிரியர் தம்பிராமையா,சமுத்திரகனியை அவமானப்படுத்த அந்த மாணவியை படிக்குமாறு கூறுவார் அந்த மாணவி சற்றும் எதிர் பாராமல் அதிவேகமாக வாசிக்க மாணவர்கள் கைத்தட்டும் காட்சியில் அரங்கமே அதிருகிறது. தெரியாத விஷயங்களை கற்றுக்கொள்ளும் பாசிடிவ் முயற்சி என மாணவர்கள் போக்கிலேயே சென்று சக நண்பராக ஒரு ஆசிரியர் இருந்தால் மட்டுமே நல்ல வெற்றி காணமுடியும் என அறிவுருத்தும் படம்.

பள்ளி பருவத்தில் சக மாணவர்களிடம் ஏற்படும் காதல். ஆசிரியர் காட்டும் அன்பிற்கும் பாசத்திற்கு முன் காதல் தோற்று படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வைக்கும் காரணம் நல்ல ஆசிரியரின் அணுகுமுறை.

இறுதியில் ஒரு சிறந்த ஆசிரியர் என்பவர், நல்ல நண்பர் மற்றும் சக மாணவனாக வாழவேண்டும் அப்படி வாழ்தால் மாணவர்கள் அனைத்தையும் கற்று அறிந்த சகலகலா வல்லவனாக மாற முடியும் என்றும் அப்பொழுது தான் இந்த சமுகத்திற்கு ஒரு சிறந்த மாணவனை கொடுக்கமுடியும் அந்த மாணவன் நாளைய இந்தியாவின் சிறந்த குடிமகனாக திகழமுடியும் என்பதை கற்பிக்கும் திரைப்படம்.

நீண்ட நாட்களுகு பிறகு நான் பார்த்த மிக  நல்ல திரைப்படம். அனைவரும் குடும்பத்தோடு மாணரவர்களோடு பார்க்கவேண்டிய படம்

நன்றி என்றும் அன்புடன்

சத்யா.


No comments: