Chennai Friends in Facebook

Tuesday, 9 October 2012

அதில ஒன்னு ரெண்டு பிகரு நம்மள மாதிரி FEELING-ஓட எதிர் பார்த்து ஒரு பார்வை பாக்கும் பாருங்க. -PART 1

        நான் கிருஷ்ணா SOFTWARE PROGRAMMER -ஆக USA, New Jersey மாகானத்தில் 6 ஆண்டுகளாக பணிப்புரிந்து வருகிறேன்,ன் நான் படித்து வளர்ந்தது எல்லாம் சென்னை தான்.என் இளம் வயதின் சொர்க்கம்.வீடு இருந்தது குரோம்பேட்டை,
பள்ளி படிப்பு பல்லாவரம் மறைமலையடிகளார் பள்ளி,பின் கல்லூரி படிப்பு 
மீனம்பாக்கத்தில் உள்ள A.M.JAIN COLLEGE.


       A.M.JAIN COLLEGE-ல் 1989 ஆம் ஆண்டு முதல் 1992 வரை B.Sc (Maths) Group-ல் படித்தேன் உண்மையாகவே அது ஒரு கனா காலம்..காலேஜ் சேர்ந்த உடன் பெரிய ஆள் ஆகிவிட்டாத ஒரு நினைப்பு வரும் பாருங்க..அட அட..அடா அந்த சுகமே தனி ...முதல் தடவையா UNIFORM இல்லாம வேற படிக்க போறோமா,விஷேச நாட்களில் கலர் DRESS போட்டாலே நாலு பிகரு பாக்கிற மாதிரி சுத்துவோம்,காலேஜ் நுழைஞ்சவுடன் தினம் கலர் கலரா புது DRESS கேக்கவா வேனும்.அதுவும் TRAIN 4 STATION தள்ளி போய் படிக்கிற சந்தோஷம்,குரோம்பேட்டை,பல்லாவரம்,மீனம்ப்பாக்கம் வித விதமா,கலர் கலரா பொன்னுங்க...சந்தோஷம் தாள முடியாம ஒரே மாசத்திலே 2 கிலோ வெய்ட்போட்டேன்..அதுவும் குரோம்பேட்டை வைஷ்னவா காலேஜ் பொன்னுங்க சும்மா தேவதை மாதிரி பாவடை தாவனியில ROAD CROSS பண்ண நிப்பாங்க,அதில ஒன்னு ரெண்டு பிகரு நம்மள மாதிரி FEELING-ஓட எதிர் பார்த்து ஒரு  பார்வை பாக்கும் பாருங்க.வயத்திலிருந்து ஆரம்பிச்சு நெஞ்சு,கழுத்து,காது,கண் வழியா உச்சி மண்டைக்கு ஒரு வேகமா ஒரு பூச்சி ஒடும் பாருங்க அந்த நேரம் உலகத்திலியே நாம தான் ரொம்ப அழகு நினைப்பு வரும்,அந்த பொன்னு தான் நம்ம LIFE PARTNER, நம்ம அம்மாவோடமருமக-னு ஒரு கற்பனை வரும்.

அதே மூடோட RAILWAY STATION போனா..அங்க MCC College MODERN FIGURE-சும்மா நிக்கும் பாருங்க அத பார்த்த உடனே தாவனி போட்ட பிகரு அப்படியே ERASE ஆகி ஜீன்ஸும் சூரிதார் போட்ட பிகரு கூட TRENDY BIKE-ல சுத்தர கற்பனை சும்ம ரெக்கை கட்டி பறக்கும். இப்படி ஒரு அரை மணி நேரம் STATION-ல  பொழுது போகும்.
அதுக்கு  அப்புறம் காலேஜ்க்கு TRAIN புடிச்சி மீனம்பாக்கம் வந்து இறங்கின புழுதி படிஞ்சு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வறண்டு போயி பாலைவனமா காட்சி தரும் மீனம்ப்பாக்கம் RAILWAY STATION,(இப்ப மாதிரி CO-ED இல்லை அப்ப),அந்த் வரண்ட காட்சியை காண விரும்பாமல்,விடு விடு என்று காலேஜ் உள்ள வேகமா நுழைச்சுடுவோம்...

                                                                                         இன்னும் விரியும்.....

No comments: