Chennai Friends in Facebook

Wednesday, 26 September 2012

நான் பவித்ரா - அமீர் மஹால்

ராயப்பேட்டைக்கென்று உள்ள சிறப்புகளில் ஒன்று பைகிராப்ட்ஸ் சாலையில் உள்ள அமீர் மஹால்,பைகிராப்ட்ஸ் சாலைப் பக்கம் ஒரு கோட்டைச் சுவர்போல இருக்கும். நுழைவாயிலின் இரு புறமும் இரு கோபுரங்கள். கோபுரங்கள் மேற்பகுதியில் ‘நகர கானா’ என்று அறியப்படும் முரசு மண்டபம். இங்கு முரசு அடித்து நான் கேட்டதில்லை. ஆனால் ஷெனாய் வாசித்திருக்கிறார்கள். நுழைவாயிலையும் கடந்து சாலையில் ஓரிடத்திலிருந்து பார்த்தால் உள்ளே வெகு தூரத்தில் உள்ள அமீர் மஹால் கண்ணுக்குப் புலப்படும். இந்த அமீர் மகாலுக்கும் இரு மூலைகளில் கோபுரங்கள். இந்த அமீர் மகாலில்தான் ஆர்க்காட் நவாபு வசித்துவருகிறார். இப்போது இருப்பவர் பெயர் முகம்மது அலி. இவ்வளவு பெரிய கட்டடமும், இவ்வளவு பெரிய வெற்றிடமும், இவ்வளவு பெரிய நுழைவாயிலும் அடேங்கப்பா பிரமிப்பு ஊட்டும் “அமிர் மஹால்” நான் வசிக்கும் இராயப்பேட்டையில் இருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

Tuesday, 25 September 2012

நாங்க கட்டு கட்டுனு கட்டுனத உங்க கிட்ட SHARE பன்னிடேன்.


Hi Friends  என் பெயர் சத்யா நான் சென்னை பம்மலில் இருக்கேன், என் Friend Sridhar Birthday last Sep 20th.எங்களுக்கு treat வெச்சான்.

பல்லாவரம் ASIF BROTHERS BRIYANI HOTEL-ல,Taste na taste அப்படி ஒரு taste. சென்னை இல்ல வேற எங்காவது இருக்குறவங்க பல்லாவரம் வந்தீங்கன்னா HOTEL தேடாதீங்க பல்லாவரம். ASIF BROTHERS nu கேளுங்க. Non veg special.

நாங்க கட்டு கட்டுனு கட்டுனத உங்க கிட்ட SHARE பன்னிடேன். நீங்களும் உங்க Friends birthday party-க்கு கண்டிப்ப நம்பி போய் ENJOY பண்ணலாம்.


சூர்யா-வின் மாற்றான் விரைவில்


                                                              மாற்றான்

அயன் பட வெற்றிக் கூட்டணியான இயக்குனர் கே.வி.ஆனந்த்தும், சூர்யாவும், மீண்டும் கூட்டணி அமைத்துள்ள படம், மாற்றான். 

ஒட்டி பிறந்த இரட்டையர்கள் பற்றிச் சொல்லும் இப்படத்தில், அமலன் - விமலன் என, இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் தோன்றுகிறார் சூர்யா. அவருக்கு ஜோடியாக, காஜல் அகர்வால் நடிக்கிறார். ஒரு ஆங்கில பத்திரிகையில் வெளி வந்த, ஒட்டி பிறந்த ரெட்டையர்களின் கதையைப் படித்த இயக்குனர் கே.வி.ஆனந்த், அதன் பாதிப்பில், மாற்றான் கதையை உருவாக்கியுள்ளார்.
 ஒரு உடம்பில் இரண்டு உருவம் என்ற புதுமையை தாங்கியிருப்பதால், மாற்றான் படத்துக்கு ரசிகர்கள் வட்டாரத்தில்,எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சூர்யா நடிக்கும் மாற்றான் படம் வரும் அக்டோபர் 12-ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது. இந்த தகவலை ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சூர்யா இதுவரை நடித்ததில் பெரிய பட்ஜெட், பெரிய வியாபாரம் ஆகியிருக்கும் படம் என்றால் அது மாற்றான்தான்.

ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் சூர்யா நடிக்க, கேவி ஆனந்த் இயக்கியுள்ளார். காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ளார்.
பாடல் காட்சிகள் நார்வே நாட்டில் இதுவரை யாரும் படமாக்காத அழகிய பிரதேசங்களில் படமாக்கப்பட்டுள்ளன.இந்தப் படத்தின் பாடல்களை சமீபத்தில் சிங்கப்பூரில் பிரமாண்டமாக வெளியிட்டனர். இப்போது பட வெளியீட்டுத் தேதியை ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
வரும் அக்டோபர் 12-ம் தேதி உலகம் முழுவதும் இந்தப் படம் வெளியாகிறது. தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பே இந்தப் படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.


நான் தனலட்சுமி ....சென்னைல இருக்கேன்....1984-ல் ST.Thersa's Girls Hr.Sec.School pallavaram

நான் தனலட்சுமி ....சென்னைல இருக்கேன்....1984- ல ST.Thersa's Girls Hr.Sec.School pallavaram  schooling முடிச்சேன் .....கால போக்குல என் பள்ளி தோழிகளோட Address, phone no எல்லாம் மாறிப் போச்சு . இப்போ என் பள்ளி தோழிகளை தேடுகிறேன்.என் தோழிகள் facebook -ல் இருந்தா  muthu dhanam என்   facebook id  contact பண்ணவும் or dhanammuthu@gmail.com  la contact பண்ணவும்.
--------------------------------------------------------------------------------------- 

சியான் விக்ரம் -ன் தாண்டவம்


                              தாண்டவம்

தாண்டவம் இந்த வார தமிழ் அதிரடி புது வரவு, தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் செப்டம்பர் 28 முதல் வெளியாகிறது. சீயான் விக்ரமின் மாறுபட்ட நடிப்பில் A.L. விஜய் கூட்டனியில் தெய்வத்திருமகள் வெற்றித்திரைபடமாக அமைந்தது. மீண்டும் இக்கூட்டனி இணைந்துள்ள தாண்டவம் படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புள்ளது. இத்திரைப்படத்தில் விக்ரம் பார்வையற்றவராக நடிதுள்ளார்.  இப்படத்திற்க்கு இயகுனர் A.L. விஜய், நடிகர்கள் சீயான் விக்ரம், ஜகபதி பாபு, அனுஷ்கா ஷெட்டி, எமி ஜாக்சன், மற்றும் லக்‌ஷ்மி ராய். இத்திரைபடத்தை தயாரித்துள்ளது UTV MOTION PICTURES. இப்படத்திற்கு இசையமைதுள்ளார் G.V. பிரகாஷ் குமர்.
 
இயக்குனர்              A.L. விஜய்

ஒளிப்பதிவு :           நிரவ் ஷா

படத்தொகுப்பு:         ஆண்டனி

இசை          :         G.V. பிரகாஷ்.





சென்னையில் தாண்டவம் வெளியாகும் திரையரங்குகள்

  • சத்யம் சினிமாஸ்
  • எஸ்கேப்
  • ஐனாக்ஸ் 
  • தேவி 
  • உட்லாண்ட்ஸ்
  • ஆல்பர்ட்
  • அபிராமி
  • சங்கம்
  • பி.வி.ஆர்
  • உதயம்
  • கமலா
  • பாரத்
  • சைதை ராஜ்
  • மகாராணி
  • ஐட்ரிம்ஸ்
  • S2 பெரம்பூர்
  • S2 திருவான்மியூர்
  • அம்பத்தூர் ராக்கி
  • அம்பதூர் முருகன்
  • வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ்
  • OMR ஏ.ஜி.எஸ்
  • மாயாஜால்
  • பிராத்தனா ட்ரைவின்
  • குரோம்பேட்டை வெற்றி
  • காசி
  • தாம்பரம் வித்யா
  • கோயம்பேடு ரோகினி
  • விருகம்பாகம் ஃபேம் நேஷ்னல்
  • ஜோதி
  • கொளத்தூர் கங்கா
  • அடையார் கணபதிராம்
தாணவம் படம் வெற்றி அடைய வாழ்த்துகள்

                                                              தகவல் - சத்யா 

நான் பவித்ரா -இராயப்பேட்டை

              Hi Friends,நான் பவித்ரா,சென்னை ராயப்பேட்டை என் சொந்த ஊர் என் தாத்தா,கொள்ளு தாத்தா பிறந்து வளர்ந்தது எல்லாம் இந்த ராயபேட்டையில் தான்,சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது,மெரினா கடற்கரை எங்கள் இராயபேட்டையிருந்து கூப்பிடும் தூரம் தான்.

            புகழ் பெற்ற அமீர் மஹால்,திமுக தலைவர் டாக்டர்.கலைஞர் அவர்களின் இல்லம்,அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமை அலுவலகம்YMCA மைதானம்,நியு காலேஜ்,அரசு மருத்துவமணை,சத்யம் சினிமாஸ், EA எனப்படும் EXPRESS AVENUE,என பல புகழ் பெற்ற இடங்களை தன்னகத்தே கொண்டு உள்ள என் அழகிய  இராயபேட்டையை பற்றி நான் இந்த சென்னை பிரண்ட்ஸ் வலைதளத்தில் எழுத உள்ளேன்.

நான் எழுதும் தமிழில் பிழை இருக்கும் நான் எப்படி எழுதுவது என்று தயங்கினேன்,ஆனால் இந்த வலைதள நிர்வாகிகள்,எழுத எழுத பிழை நீங்கும் எழுதுங்கள் என்று தைரியம் கொடுத்தால் எழுதிகிறேன்,பிழை இருந்தால் சுட்டி காட்டவும் திருத்தி கொள்கிறேன்.  நன்றி.



Monday, 24 September 2012

Life Science Technical Writers

ultramed Technical Information Pvt Ltd is hiring Life Sciences Content) Writers & Researchers. Professionals / Freshers with 0 to 1 year experience may considered. Ideal job for ladies and purely day shift 10 am to 6 pm job and no overtime required. Part time half day 5 hours office job also available for talented ladies with high research abilities.( Working from home not possible.) 

Work independently on researching content (non-technical) related to Pharmaceutical industry businesses, bio-technology businesses and other life sciences related businesses. Assignments involve researching content / data from Europe, US, Canada, China, Japan, Korea, India and various other major emerging markets. 

Should be able to extensively research content from the Inteet using various techniques and also be able to search on paid inteational databases. 
Prepare business content, write-ups, information reports, event reports, market research reports and such other content. 

Information collection could range from company projects to financial information to techno-commercial information. Assignments could vary from time to time. Should be able to take decisions and should be fully aware of the useful databases, . Should have keen interest in pharma & biotechnology businesses and related industry information. Previous experience not essential as adequate training would be provided by seniors / domain specialists.


Qualification:
UG - B.Sc - Any Specialization, Bio-Chemistry, Biology, Chemistry, Food Technology, Microbiology, Zoology) OR (PG - M.Sc - Any Specialization, Bio-Chemistry, Biology, Chemistry, Food Technology, Microbiology, M.Pharma - Pharmacy

Forward ur resumes to berhtchennai@gmail.com or kayalvizhi3691@gmail.com

விண்ணப்பிக்கவும் திராவிடியன் பல்கலைக்கழக சிறப்பு உதவித்தொகை



குப்பம்: ஆந்திராவிலுள்ள திராவிடியன் பல்கலைக்கழகம், தான் வழங்கும் ரெகுலர் எம்.ஏ, எம்.பில் மற்றும் பி.எச்டி படிப்புகளுக்கு, தமிழகம் மற்றும் கர்நாடகாவிலிருந்து அதிகளவு மாணவர்களை சேர்க்கும் திட்டத்தைக் கொண்டுள்ளது. இப்பல்கலையில், Off - campus முறையில் பி.எச்டி படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆந்திராவின், சித்தூர் மாவட்டத்தில், குப்பம் என்ற இடத்திலுள்ள இப்பல்கலையின் தமிழ் துறையில், கற்பித்தலை மேம்படுத்த, மேலும் 4 ஆசிரியர்களை நியமிக்க, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை, இத்துறையின் உள்கட்டமைப்புகளுக்காக, 2 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.
தமிழ் துறையில், எம்.ஏ, எம்.பில் மற்றும் பி.எச்டி படிப்புகளில், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பொருட்டு, தமிழக அரசு, சிறப்பு உதவித்தொகை திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ரெகுலர் மாணவர்களுக்கான, உணவு மற்றும் தங்குமிட செலவினங்கள் இவற்றுள் அடங்கும்.
பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாயுள்ள BC/MBC/SC/ST பிரிவு மாணவர்கள் இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதைப்பற்றி முழு விபரம் அறிய www.dravidianuniversity.ac.in என்ற இணையதளம் செல்க அல்லது kduvivekago@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புக