நான் கீர்த்தனா Photography என் Profession
i am keerthana freelancing photographer
ஹாய் ஃப்ரண்ட்ஸ் நான் கீர்த்தனா,யாருனு யோசிக்கிறிங்களா போன ARTICLE-ல விஸ்வா கூட COFFEE DAY-ல TROPICAL ICEBERG சாப்பிட்ட அதே கீர்த்து என்கிற கீர்த்தனா நானே தான், என்னடா அவன் கனவில வந்த பொண்ணு நிஜமா வருதேனு பாக்கிறீங்களா உணமை தாங்க.
நாம கனவு காண்கிற பொருளா,வேலையோ,படிப்போ,வசதி,வாய்ப்புகளோ அல்லது வாழ்க்கை துணையோ எதுவா இருந்தாலும் இந்த உலகத்திலே ஏதோவொரு மூலையில நமக்காக காத்துக்கிட்டுருக்கு, நம்மளோட,ஆர்வத்திலேயும்,தன்னம்பிக்கையிலும்,விடா முயற்சியிலும் தான் நாம கனவு நினைவாகற விஷயம் அடங்கி இருக்கு.விஸ்வாக்கு ஒரு லட்சிய கனவு இருந்த மாதிரி எனக்கும் உண்டுங்க,என்ன “நானி” மாதிரி பாய் ஃப்ரண்டானு நினைக்கிறீங்களா அதான் இல்ல.
“
PHOTOGRAPHY” இது தான் என் கனவு எந்த வயசில இந்த ஆசை வந்ததுனு தெரியாது ஆனால யாரால வந்ததுனு தெரியும் எங்க சித்தப்பா ஒரு கேமரா பைத்தியம் ஆனா அவர் தொழில்
PHOTOGRAPHY இல்லை,வித வித கேமரா வச்சிருக்காரு FILTERS
வச்சிருக்காரு லீவு நாட்களா எங்களா வித விதமா நிறைய போட்டோ எடுத்து PRINT போட்டு ரசிப்பார். நான் விஸ்வா சொல்ற மாதிரி பக்கத்து வீட்டு சமந்தா பொண்ணு மாதிரி இருப்பேனோ இல்லையோ,எங்க சித்தப்பா எடுக்கிற போட்டோவில பத்து வீடு தள்ளி இருக்கிற சமந்தா பொண்ணு மாதிரி சத்தியமா அழகாவே இருப்பேன்.சராசரியா எல்லா மனிதர்களுக்கும் நம்மை அழகா காட்டுகிற பொருள் மீது ஈர்ப்பு இருக்கும் அந்த மாதிரி தான்,என்னை அழகா காட்டின PHOTOGRAPHY மீது ஈர்ப்பு வந்தது நினைக்கிறேன்.
என் முதல் கிளிக்: ஐந்து வருஷத்துக்கு முன்னாடி எங்க அக்காவை பொண்ணு பார்க்க வந்தாங்க வந்த மாப்பிள்ளை போோவில்பார்த்ததை விட நல்லாவே இருந்தாரு எங்க அக்காவுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு,மத்த ஏற்பாடுகளே செய்றத பத்தி பெரியவங்க பேச ஆரம்பிச்சாங்க,எங்க அக்கா என் கிட்ட வந்து ”அவர் எப்படி இருக்கார்”என்றாள்,அவளை கிண்டல் பண்ணறத்துக்காக ”என்னமோ என் கண்ணுக்கு சுமார தான் இருக்காரு” என்று சொன்னேன்,” அதற்கு அவள் “ஆமா இவ கண்ணு பெரிய கேமரா கண்ணு பாரு” என்று கோபமாக சொல்லி விட்டு அவள் அறைக்குள் சென்றுவிட்டாள்,அப்ப தான் எனுக்குள் அந்த FLASH அடுத்தது மாப்பிள்ளைக்கு தெரியாமல் அவரை CASUAL-அ போட்டோ எடுத்து அக்காகிட்ட குடுத்த எப்படி இருக்கும்ன தோனுச்சி,நேர சித்தப்பாகிட்ட போயி விஷயத்தை சொன்னென் முதலில் தயங்கியவர் என் PHOTOGRAPHY ஆர்வத்தை கண்டு அவர் புதிதாக வாங்கி இருந்த SONY CYBER SHOT CAMERA எடுத்து கொடுத்து 5 நிமிடம் ”HOW TO OPERATE CYBERSHOT CAMERA” என்ற விளக்கும் கொடுத்து விட்டு மாப்பிள்ளை வீட்டார் கண்ணில் படாமல் எடு என்று எச்சரித்துவிட்டு சென்றார்,வாழ்க்கையில் முதல் தடவையா போட்டோ எடுக்க போறேன் அதிலும் எங்க அக்காவை சந்தோஷ படுத்தனும்,முடிவு செய்தாச்சு இவர் தான் எங்க அக்கா வீட்டுக்காரர் என்று,எந்த ஒரு சந்தர்ப்பத்திலேயும் அந்த புகைப்படம் மாமாவையும் அக்காவையும் சஞ்சலபடுத்த கூடாது,அதே நேரத்தில் காலத்திற்க்கும் என் பெயரை சொல்ல வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டு கூடத்திற்க்கு வந்தேன்,பெரியவர்கள் கூட்டத்தில் உட்கார்ந்து நெளிந்து கொண்டிருந்தார் என் வருங்கால மாமா. நானும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தேன். எதேச்சையாக திரும்பிய என் சித்தப்பா நான் தவிப்பதை கண்டு என் அண்ணனை அழைத்து “டேய் கணபதி அங்க என்ன பண்ணற மாப்பிள்ளை தனியா போரடிச்சிக்கிட்டு உங்காதிருக்காரரு,அவரை கூட்டிட்டு போய் தோட்டத்தை எல்லாம் சுத்தி காட்டுடா என்றார். இப்படி யாராவது காப்பாற்ற மாட்டார்களா என்று காத்து கிடந்தவர் தன் நெகிழ்ச்சியாக ஒரு நன்றியை புன்னகையாக சிந்திவிட்டு என் அண்ணன் பின்னால் சென்றார்,என் சித்தப்பாவின் சமயோசித அறிவை சைகையால் பாராட்டிவிட்டு நானும் வேகமாக மாடியில் இருக்கும் என் அண்ணன் அறைக்கு ஓடினேன் அங்கு இருந்து பார்த்தால் எங்கள் தோட்டத்தின் FULL VIEW-வும் தெரியும்.
அண்ணன் அவரை கூட்டி கொண்டு மாட்டு தொழுவம்,கிணத்து மேடு,மோட்டர் ரூம் நாங்கள் குல தெய்வாமாக வழிப்படும் தோட்டத்தில் உள்ள பாம்பு புற்று என சுத்தி காட்டி கொண்டிருந்தான் எனக்கு எந்த இடமும் திருப்தியாக இல்லை,அந்த நேரத்தில் எங்கள் ஊரிலேயே மிக வயதான பாட்டியான ”மாக்காயி கிழவி” மாப்பிள்ளையை காண வீட்டின் பின்புறம் வந்தாள்,என் அண்ணனை பார்த்து “ஏம்பா கணபதி இவர் தான் நம்ம வைஷ்ணவிய கட்டிக்க போற மாப்பிள்ளையா என்று கேட்டாள் ,”ஆமா பாட்டி இவர் தான் என்று” என் அண்ணன் மாப்பிள்ளையிடம் மாக்காயி கிழவியை அறிமுக செய்து வைக்க,இவர் வணக்கம் சொல்ல கிழவி ஆசிர்வாதம் செய்ய,இதை விட என்ன வேண்டும் என் முதல் கிளிக்-யை அடிக்க.இன்று மாக்காயி கிழவி உயிரோடு இல்லை,ஆனால் அவள் வீட்டில் கூட என் முதல் கிளிக்கில் புகைப்படமாக ஆசிர்வதித்து கொண்டிருக்கிறாள்.
என் FLASH BACK சொல்றேனு ரொம்ப மொக்கை போட்டுடேனா சாரி ஃப்ரண்ட்ஸ் இன்னிக்கு நான் சென்னையில் இருக்கிற WEB DEVELOPMENT AND IMAGE PROCESSING COMPANYகளுக்கு FREELANCING PHOTOGRAPHER-அ வேலை பாக்கிறேனா அதுக்கு இந்த FLASH BACK அவசியம் தான்.இரண்டாவது பாராவில் சொன்ன மாதிரி நாம காண்கிற கனவு இந்த உலகத்தில ஏதோவொரு மூலையில நமக்காக காத்துகிட்டுருக்கு,அப்படி எனக்கு காத்திக்கிட்டுருந்த வேலை தான் என் FREELANCING PHOTOGRAPHER வேலை.
நான் +2 முடித்தவுடன் என் அண்ணன் அக்கா மாதிரி நானும் ENGIEERING படிக்க வேண்டும் அப்ப தான் நல்ல SOFTWARE—ல வேலை செய்ற பெரிய மாப்பிள்ளை (அக்கா விட்டுகாரர்) மாதிரி எனக்கும் மாப்பிள்ளை கிடைப்பார் என்று அம்மா,அப்பா எல்லோரும் விரும்பினாங்க,எனக்கு துளியும் விருப்பமில்லை என் ஆர்வமும் ஆசையும் PHOTOGRAPHY மீத இருந்தது,ஆனால் அத்துறையின் வேலைவாய்ப்பு,எதிர்காலம் மற்றும் வருமானம் பற்றி விவரங்கள் எதுவும் தெரியாமல் அவர்களுடன் வாதம் செய்வதோ,பிடிவாதம் பிடிப்பதோ நல்லா இருக்காது,அதற்காக ENGINEERING படிக்கவும்
விருப்பமில்லை.இதை என் சித்தப்பாவிடமும்,மாமாவிடமும் (அக்கா விட்டுக்காரர் ) கூறினேன்,சித்தப்பா சிறிது தயங்கினார்,ஆனால் மாமா கவலை படாதே அதற்கான ஏற்பாட்டை நான் செய்கிறேன்,நீ அவர்கள் சொல்வதை போல் ENGINEERING APPLY செய், நீ PHOTOGRAPHY படிப்பது என் பொருப்பு என்றார், மாமா சொன்னதை போல் ENGINEERING APPLY செய்தேன்,அந்த குறிப்பிட்ட நாளும் வந்தது,சென்னை ANNA UNIVERISTY-யில் COUNSELING,மாமா அக்கா சென்னையில் இருந்ததால் அங்கிருந்து COUNSELING செல்வதாக முடிவு செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே நான் அப்பா,சித்தப்பாவுடன் சென்னைக்கு கிளம்பி சென்றேன்.
காலையில் சென்னையில் அக்கா வீட்டிற்கு வந்திறங்கினோம்,மாமா எங்களை காரில் வந்து அழைத்து சென்று வீட்டில் விட்டுட்டு அவர் OFFICE கிளம்பி சென்றார்,கிளம்பும் போது சாயந்திரம் உனக்கு ஒரு SURPRISE இருக்கிறது என்று ரகசியமாக சொல்லி விட்டு கிளம்பினார்.அதன் பின் அப்பாவும் சித்தப்பாவும் சென்னையில் இருக்கும் ஊர்க்காரரை பார்க்க கிளம்பி சென்றார்கள், நான் சிறிது நேரம் அக்கா குழந்தையுடன் விளையாடி,மத்தியான சமையலுக்கு அக்காவிற்க்கு உதவி செய்து சாப்பிட்டு விட்டு உறங்க சென்றேன்.நன்றாக தூங்கி கொண்டிருந்த என்னை அக்கா எழுப்பினாள்”எழுந்திரு மாமா நம்ம எல்லோரை தயாரா இருக்க சொன்னார் வெளிய போகனுமாம்”என்றாள், வெளியே சென்றிருந்த அப்பாவும்,சித்தப்பாவும் வந்திருந்தார்கள்.ஒரு மணி நேரத்தில் எல்லோரும் தயாராகவும்,மாமாவின் கார் APPARTMENTS PARKING நுழைந்தது.அடுத்த அரைமணி நேரத்தில் மாமாவும் கிளம்பி எல்லோரும் காரில் பயணித்து கொண்டிருந்தோம்.20 நிமிட பயணத்தில் இறுதியில் ஒரு காம்பவுண்ட் உள்ளே எங்கள் கார் நுழைந்து நின்றது.காரிலிருந்து இறங்கிய எனக்கு அந்த கட்டிடத்தின் பெயரை கண்டதும் என் முகத்தில் மின்னலென FLASH,ஏன்னா மாமா எங்களை கூட்டி வந்தது அடையாரில் உள்ள CHENNAI PHOTOGRAPHY CLUB,அப்பா இங்கே ஏன் மாப்பிள்ளை கூட்டி வந்தார் என்று விழிக்க சித்தப்பாவிற்கு புரிந்துவிட்டது.அக்காவிற்கு இந்த விஷயம் தெரியும் என்பதை போல என்னை பார்த்து சிரித்தாள்,மாமா யாருடனோ MOBILE-ல் பேசினார் சிறிது நேரத்தில் மாமாவை பார்த்து சிரித்தப்படியே ஒருவர் வந்து கைக்குலுக்கினார்,மாமா எல்லோரையும் அறிமுக செய்துவிட்டு என் பக்கம் திரும்பி இவள் தான் நான் சொன்ன கீர்த்தனா என் SISTER-IN-LAW என்றார்.என்னிடம் கைக்குலுக்கிய அவர் எல்லோரையும் அழைத்து கொண்டு ஒரு அறைக்குள் சென்றார்
அந்த அறையில் நுழைந்தவுடன் நேர் சுவற்றில் மாட்டி இருந்த ஒரு புகைப்படத்தை கண்டவுடன் என் கண்ணில் என்னை அறியாமல் கட கடவென கண்ணிர் கொட்டியது,கை கால்கள் நடுங்கியது.என் அருகில் இருந்த அப்பா ”அட இது எங்க ஊரு மாக்காயி கிழவி அவ போட்டோ எப்படி இங்க என்று கேட்க, நம்ம கீர்த்தனா எடுத்தது தான் என்று சித்தப்பா சொல்ல அக்காவும் மாமாவும் ஆமோதிக்க நான் ஓடி சென்று என் அக்காவை கட்டி கொண்டேன்,மாமாவும் அவர் நண்பரும் நான் எடுத்த மற்ற புகைப்படங்களான மாக்காயி கிழவி செங்கல் தூளை கொண்டு பல் துலக்குவது,ஊர்க்கோடியில் உள்ள சிவன் கோவில் மேல் பிரதோஷ தினத்தின்று பறக்கும் வெண் கழுகு,மயானத்தின் வாசலில் உள்ள ஹரிசந்திரன் கல்லின் பின்புறம் கண்மூடி 1,2,3 என்னும் சிவகாமி அக்கா பொன்னு ராதிகா,என ஓவ்வொன்றாக காட்டி கொண்டிருந்தனர்.இவை அனைத்தும் என் அக்காவும் மாமாவும் ஊருக்கு வரும் போது PEN DRIVE-ல் COPY பண்ணி வந்துள்ளனர்,என் அக்காவை பார்த்து “THANKS AKKA” என்றேன், இப்ப சொல்லாதே இன்னும் இருக்கு என்று பீடிகை போட்டாள்,அதற்குள் புகைப்படங்களை பார்த்துவிட்டு என் அருகில் வந்த என் அப்பா என்னம்மா இவ்வளவு நல்லா போட்டோ எடுக்கிற என் கிட்ட காட்டினதே இல்ல என்றார்,இதெல்லாம் உங்க சித்தப்பா டிரெய்னிங்கா என்றார்,நான் இல்லை அதுவே ஆர்வத்தில கத்துகிடுச்சு என்றார் பயந்தபடியே, நான் தப்பா சொல்லடா ரொம்ப நல்லா இருக்கு என்றார்.என் மாமாவின் நண்பர் அப்பாவிடம் வந்து ஒரு காசோலையை நீட்டினார், அதில் 15000 ரூ-யென குறிப்பிட்டிருந்தது என்ன இது என்றார் அப்பா உங்கள் பெண்ணின் சிறந்த 5 புகைப்படத்திற்கான பணம்,மும்பையை சேர்ந்த தனியார் இந்திய கலாச்சாரா ஆராய்ச்ச்சி நிறுவனம் கீர்த்தனாவின் படத்தை வாங்கியுள்ளார்கள் அதற்க்கான காசோலை தான் இது என்றார்.என் அப்பாவிற்கு நம்பவே முடியல,”கீர்த்தனாவிற்க்கு நல்லா PHOTOGRAPHY பேசாமா அவளே PHOTOGRAPHY படிக்க வைங்க நல்ல FUTURE இருக்கும்” என அவர் தொடங்க இதுவே சமயம் என மாமாவும் “ஆமா மாமா
எனக்கும் அதான் தோனுது” என அவரும் ஆலோசனை கூற அப்பா சற்றே குழம்பி போனார்,இதை புரிந்த கொண்ட மாமாவின் நண்பர் அவ COUNSELING ATTEND பண்ணட்டும் வேனாமினு சொல்லலே,உங்களூக்கு இந்த படிப்ப பத்தி சந்தேகம் இருந்ததுனா எனக்கு தெரிந்த நண்பர்
REFOCUS ESWAR-னு CAREER COUSELLOR-அ இருக்கார் அவர்கிட்ட CONSULT பண்ணுங்க என்று அவர் கைப்பேசி 9003055643 எண்ணை கொடுத்தார்.அவருக்கு நாங்கள் அனைவரும் நன்றி சொல்லிவிட்டு கிளம்பினோம்.வரும் வழியில் இரவு உணவை ஓட்டலில் முடித்து விட்டு வீடு திரும்பினோம்.மாமாவின் நண்பர் கொடுத்த காசோலையை கையில் வைத்து பார்த்து கொண்டிருந்தார் அப்பா,”அப்பா குழப்பமாக இருக்கிறார் போய் பேசுங்க”என்று அக்கா மாமாவை அனுப்பிவைத்தாள்.“என்ன மாமா ENGINEERING-அல்லது PHOTOGRAPHY COURSE-னு குழப்பமா இருக்கா என மாமா கேட்க “இல்ல மாப்பிள்ளை என் புள்ளைக்கு இவ்வளவு திறமையும் ஆர்வமும் இருக்கிறப்ப நான் வேற படிப்பு படிக்க வச்சா அவ திறமை வீனா போய்டும்,ஆனா இதில என்ன மாதிரி எதிர்காலம் அமையும்னு தெரியல,பெரிய பொண்ண நல்ல படிக்க வச்சு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுத்துட்டான்.சின்ன பொண்ண இப்ப விட்டுட்டானேனு சொந்தக்காரங்க சொல்லற மாதிரி ஆகிடுமோ பயமா இருக்க அதான் யோசிக்கிறேன்”என்றார், ”சரி மாமா நாளைக்கு நான் லீவு போட்டுட்டு வரேன் அந்த
REFOCUS ESWAR சாரை பாக்கலாம்,அவர் என்ன சொல்றார் பாப்ப்போம் அப்புறம் முடிவெடுத்துக்கலாம்,இப்ப போய் தூங்குங்க” என்று அவர்களை சொல்லிவிட்டு என்னை போய் படுமா நளைக்கு எல்லாத்தையும் நல்லபடியா முடிச்சிடலாம் என்று கண்ணால் யாமிருக்க பயமேன் என உத்திரவாதம் கொடுத்து விட்டு படுக்க சென்றார்.
மறுநாள் காலை REFOCUS அலுவலகத்திற்கு PHONE செய்து APPOINTMENT பெற்று 10.30 மணிக்கெல்லாம்,சென்னை சைதாப்பேட்டையில் உள்ள REFOCUS அலுவகத்தில் இருந்தோம்,எங்களுக்கு முன் இருவர் காத்து கொண்டிருந்தனர்,ஒருவர் ENGINEERING படித்து விட்டு வேலை தேடி கொண்டிருப்பவர்,மற்றொருவர் BUSINESS தொடங்க உள்ளார்,என்ன தொழில் தொடங்கலாம் என் ஆலோசனை கேட்க வந்துள்ளார்.ஒரு மணி நேரம் கழித்து எங்களுக்கு அழைப்பு வந்தது,உள்ள சென்றோம்.
எந்த ஒரு செயலில் ஈடுபடும் பொழுது நமபிக்கையுடன் ஈடுபடவேண்டும், நம்பிக்கை நம்மிடையே குறையும் பொழுது,நமக்கு நம்பிக்கை கொடுக்க யாராவது நம் அருகில் இருப்பார்கள்,முதலில் அவர்களுடைய முகம் தான் குறிப்பாக கண்கள் நமக்கு நம்பிக்கையும் தரும்,அப்படி ஒரு கண்கள் தான்
REFOCUS ESWAR சாரிடம் பார்த்தேன்.புன்னகையுடன் வரவேற்றார் விவரங்களை கேட்டறிந்தார்.பின்னர் எங்களை பார்த்து கீர்த்தனாவிடமும், அவள் அப்பாவிடம் தனி தனியே பேச வேண்டும்,முதலில் கீர்த்தனா”என்றார்.அப்பாவும் மாமாவும் வெளியே செல்ல என்னிடம் என் ஊரில் உள்ள நண்பர்,உறவனர்கள்,பற்றி,பள்ளி படிப்பு,ஆர்வங்கள்,பொழுது போக்கு என 10 நிமிடங்கள் கேட்டறிந்தார்,பின் என் அப்பாவிடம் குடும்ப சூழல்,உறவினர்கள்,மகன்,மகள் மற்றும் அப்பாவின் PHOTOGRAPHIC COURSE பற்றிய சந்தேகங்களை கேட்டறிந்து விட்டு மீண்டும் 10 நிமிடங்களில் அழைக்கிறேன் என்றார்.பத்து நிமிடத்தில்
REFOCUS ESWAR சார் அறையிலிருந்து அழைப்பு வந்தது.
அடுத்த அரை மணி நேரம்
- PHOTOGRAPHY COURSE என்றால் என்ன?
- CERTIFICATE COURSE,DIPLOMA AND DEGREE COURSE DETAILS
- எங்கே படிக்கலாம்?
- இந்தியாவில் PHOTOGRAPHIC INSTITUTE LIST
- எவ்வளவு கட்டணம்?
- வேலைவாய்ப்பு விவரங்கள்
- துணை படிப்பு மற்றும் மேற்ப்படிப்பு விவரங்கள்
- சாதனையாளர் பட்டியல் என
பல விவரங்களை கொடுத்தார்.விவரங்களை கேட்டு நானும் அப்பா மட்டும் அல்ல மாமாவும் அசந்து போனார்.எங்களை பார்த்து ”நான் விளக்கியதில் சந்தேகம் எதாவது இருந்தால் கேளுங்கள் என்றார்,உடனே அப்பா எனக்கு என்னவெல்லாம் சந்தேகம் இருந்ததோ அத்தனைக்கும் எங்களுக்கு விடை கிடைத்து விட்டது சார்,மிகவும் நன்றி சார் என் பெண்ணை ENGINEERING சேர்க்கலாம் என்று தான் சென்னை வந்தேன். இனி அவளுக்கு பிடித்த PHOTOGRAPHY துறையில் போக நான் முழு சம்மதமும்,அதில் அவள் சாதிக்க தேவையான வழிமுறைகளையும் செய்து தருவேன் என்று கூறி என் கையை ஆதரவாக பிடித்தார், நான்
REFOCUS ESWAR சாரையும்,என் மாமாவியும் நன்றி பெருக்குடன் பார்த்து கொண்டே என் அப்பாவின் தோளில் சாய்ந்து கொண்டேன்.
அடுத்த ஒரு மாதத்தில் சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் PHOTOGRAPHIC INSTITUTE-ல BASIC AND ADVANCED PHOTOGRAPHY COURSE-ல் சேர்ந்தேன் மேலும் சென்னை மகளீர் கல்லூரி ஒன்றில் B.Sc (VISUAL COMMUNICATION) சேர்ந்து படித்து முடித்து இப்பொழுது சென்னையில் உள்ள மூன்று WEB DEVELOPMENT AND IMAGE PROCESSING COMPANY-களுக்கு FREELANCING PHOTOGRAPHER-அ வேலை செய்கிறேன். நல்ல வருமானம்,மன நிறைவு,நிறைய FREE TIME கிடைக்குது நண்பர்களோட பேச என் CAREER-யை UPDATE செய்ய என.
அவ்வளாவு தான் ப்ரண்ட்ஸ் என்ன பத்தி சொல்ல இப்ப சொல்லுங்க நான் கண்ட கனவு நினைவாகும் போது விஸ்வா கனவு நினைவாகதா? முயற்சி செஞ்சா LAPTOP,AC CABIN,FAZER BIKE,WEEKEND ECR RIDING,COCK TAIL PARTY கூடவே நடிகை சமந்தா போல இருக்கிற பக்கத்து வீட்டு பொண்ணு,எல்லாம் கிடைக்கும் தானே……நீங்க விஸ்வாக்கு கொஞ்சம் சொல்லுங்க முயற்சி பண்ண சொல்லி,அப்படி இல்லனா REFOCUS ESWAR சார் கிட்ட CONSULT பண்ண சொல்லுங்க.OK-va..எப்படி சொல்றது கேட்கிறிங்களா…இந்த ARTICLEக்கு COMMENT பண்ணுங்க போது..EASY-ya விஸ்வாக்கு போயிடும்.BYE FRIENDS.
-->
No comments:
Post a Comment