Chennai Friends in Facebook

Wednesday, 26 September 2012

நான் பவித்ரா - அமீர் மஹால்

ராயப்பேட்டைக்கென்று உள்ள சிறப்புகளில் ஒன்று பைகிராப்ட்ஸ் சாலையில் உள்ள அமீர் மஹால்,பைகிராப்ட்ஸ் சாலைப் பக்கம் ஒரு கோட்டைச் சுவர்போல இருக்கும். நுழைவாயிலின் இரு புறமும் இரு கோபுரங்கள். கோபுரங்கள் மேற்பகுதியில் ‘நகர கானா’ என்று அறியப்படும் முரசு மண்டபம். இங்கு முரசு அடித்து நான் கேட்டதில்லை. ஆனால் ஷெனாய் வாசித்திருக்கிறார்கள். நுழைவாயிலையும் கடந்து சாலையில் ஓரிடத்திலிருந்து பார்த்தால் உள்ளே வெகு தூரத்தில் உள்ள அமீர் மஹால் கண்ணுக்குப் புலப்படும். இந்த அமீர் மகாலுக்கும் இரு மூலைகளில் கோபுரங்கள். இந்த அமீர் மகாலில்தான் ஆர்க்காட் நவாபு வசித்துவருகிறார். இப்போது இருப்பவர் பெயர் முகம்மது அலி. இவ்வளவு பெரிய கட்டடமும், இவ்வளவு பெரிய வெற்றிடமும், இவ்வளவு பெரிய நுழைவாயிலும் அடேங்கப்பா பிரமிப்பு ஊட்டும் “அமிர் மஹால்” நான் வசிக்கும் இராயப்பேட்டையில் இருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

No comments: