Chennai Friends in Facebook

Tuesday, 25 September 2012

சூர்யா-வின் மாற்றான் விரைவில்


                                                              மாற்றான்

அயன் பட வெற்றிக் கூட்டணியான இயக்குனர் கே.வி.ஆனந்த்தும், சூர்யாவும், மீண்டும் கூட்டணி அமைத்துள்ள படம், மாற்றான். 

ஒட்டி பிறந்த இரட்டையர்கள் பற்றிச் சொல்லும் இப்படத்தில், அமலன் - விமலன் என, இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் தோன்றுகிறார் சூர்யா. அவருக்கு ஜோடியாக, காஜல் அகர்வால் நடிக்கிறார். ஒரு ஆங்கில பத்திரிகையில் வெளி வந்த, ஒட்டி பிறந்த ரெட்டையர்களின் கதையைப் படித்த இயக்குனர் கே.வி.ஆனந்த், அதன் பாதிப்பில், மாற்றான் கதையை உருவாக்கியுள்ளார்.
 ஒரு உடம்பில் இரண்டு உருவம் என்ற புதுமையை தாங்கியிருப்பதால், மாற்றான் படத்துக்கு ரசிகர்கள் வட்டாரத்தில்,எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சூர்யா நடிக்கும் மாற்றான் படம் வரும் அக்டோபர் 12-ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது. இந்த தகவலை ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சூர்யா இதுவரை நடித்ததில் பெரிய பட்ஜெட், பெரிய வியாபாரம் ஆகியிருக்கும் படம் என்றால் அது மாற்றான்தான்.

ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் சூர்யா நடிக்க, கேவி ஆனந்த் இயக்கியுள்ளார். காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ளார்.
பாடல் காட்சிகள் நார்வே நாட்டில் இதுவரை யாரும் படமாக்காத அழகிய பிரதேசங்களில் படமாக்கப்பட்டுள்ளன.இந்தப் படத்தின் பாடல்களை சமீபத்தில் சிங்கப்பூரில் பிரமாண்டமாக வெளியிட்டனர். இப்போது பட வெளியீட்டுத் தேதியை ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
வரும் அக்டோபர் 12-ம் தேதி உலகம் முழுவதும் இந்தப் படம் வெளியாகிறது. தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பே இந்தப் படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.


No comments: