Chennai Friends in Facebook

Thursday, 4 October 2012

நான் ஜான்சி கொடுங்கையூர் எம். ஆர் நகரிலிருந்து ...

ஹாய், சென்னை ப்ரிண்ட்ஸ், என் பெயர் ஜான்சி நான் எம்.ஆர் நகர்,கொடுங்கையூரில் வசிக்கிறேன். எம்.ஆர் நகர் என்று சொன்னாலே மக்களுக்கு ஒரு வெறுப்பான விஷயம்தான். என்னென்றால் ஒரே  கூட்டமாக,நடந்து போக கூட வழியே இல்லாமல் இருக்கும். ஆனால் எம்.ஆர். நகர் நாம் எல்லோருக்கும்  ஒரு ஊன்று கோலாய் இருக்கிறது  ஓகே ப்ரிண்ட்ஸ் சிறிதளவு நாம் எம்.ஆர்.நகரை ஆராய்ந்து பார்க்கலாமா.......? எங்கள்  வீட்டின் அருகாமையில் உள்ள எம். ஆர். நகரில் பிரபலமான சுபா மருத்துவமனை உள்ளது அங்கு எல்லாவிதமான SPECIALIST டாக்டர்களும் உள்ளனர். சுபா மருத்துவமனை சகல வசதிகளுடன் சிறப்பு  மறுத்தவர்கள்  கொண்டு இயங்குவதால் கொடுங்கையூர் சுற்றி உள்ள மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது ,

        மேலும் எங்கள் எம்.ஆர் .நகரில் பிரசித்தி பெற்ற சென்ட் ஆணீஸ் உயர் நிலை பள்ளி, FES மேல் நிலை பள்ளி,டான் போஸ்கோ பள்ளிகள் உள்ளன.சக்தி வாய்ந்த பவானி அம்மன் திருகோவில்,மிக பிரபலமான மாதா கோவில்.அந்த சர்ச்சில் ஒவ்வொரு மாதமும் சாயங்கால வேலையில் மாதாவின் தேர்,எம்.ஆர்.நகரை சுற்றி வந்து அருள் பாலிக்கும், ஏராளமானோர் தேர் விழாவில் கலந்து கொண்டு மாதாவின் அருளை பெற்று மகிழுகின்றனர்.பக்கத்திலேயே காய்கனி மார்கெட்டுகளும், ஆடை ஆபரண கடைகளும்,நகைகடைகளும் உள்ளது.வார இறுதியில் குழந்தைகள் அருகில் உள்ள   பார்க்குக்கு சென்று தங்கள் பொழுதை இனிமயாக கழிகின்றனர்.பிருந்தா,ஓடியன்  மணி போன்ற திரை அரங்கங்களும்.அருமையான ருசியான இனிப்பகம் எங்கே என்று கேட்டால் சிறு குழந்தைகள் கூட சொல்லும் ஒரே கடை நம் எம்.ஆர்.நகரில் சீலம் பேக்கரி அங்கு எல்லா விதமான,  
எல்லா ரகமான, இனிப்பு வகைகளும், காரவகைகளும் கிடைக்கும்.குழந்தைகளை கவரும் பீட்சா, பர்கர் ஆகியவகைகளும் உள்ளது. 

ஓகே
 ப்ரிண்ட்ஸ்  இது வரை நாம்  எம்.ஆர். நகரை பார்த்தோம்...மீண்டும் நம்  கொடுங்கையூர் பயணம் தொடரும்.....  ...

No comments: