வணக்கம் சென்னை பிரண்ட்ஸ்,
ECR பயனத்த நாம திருவான்மியூரில் இருந்து START பண்ணுவோம்.
எது பண்ணினாலும் சாமி கும்பிட்டு தொடங்குவது தான் நம்ம வழக்கம் .so frist மருந்தீஸ்வரர் கோவில்,இந்த கோவில் ECR துவக்கத்திலேயே மெயின் ரோடுலே அமைசிருக்கு.இது ரொம்ப பழமையான கோவில்.
1200 வருஷம் பழசுன்னு வரலாறு சொல்லுது.சோழர் காலத்துது .1 Acre பரப்பளவுல கட்டப்பட்ட இந்த கோவில்ல மூலவர் சுயம்பு லிங்கம்.இவர வேண்டிகிட்டா எல்லா நோயும் பறந்தோடிடும்னு நம்பிக்கை .அதனால் தான் இவர் பெயர் மருந்தீஸ்வரர் .அம்மன் பெயர் திரிபுரசுந்தரி.
ராமயணம் எழுதின வால்மீகி இங்கே வந்து சிவனை வணங்கி அருள் பெற்றதா சொல்லுவாங்க அதனால தான் இந்த ஊருக்கு திருவால்மீகியூர்-னு பெயர் வந்துச்சு ....கால போக்குல மருவி திருவான்மியூர்-னு மாறி போச்சு
இவரோட சமாதி ECR ரோட்டுலேயே இருக்கு.சாமி கும்பிட்டுட்டு கோவில சுத்தி வந்தா ,கோவில் பிரகாரம் அமைதியா மனசுக்கு இதமா இருக்கும் .
சரி நாம கொஞ்ச நேரம் உக்கார்ந்துட்டு கெளம்புவோமா.....
பயணம் தொடரும்..........
தனலட்சுமி முத்துராமலிங்கம்



No comments:
Post a Comment