Chennai Friends in Facebook

Friday, 5 October 2012

துப்பாக்கி பட பாடல் வெளியீடு தள்ளிவைப்பு :

                                  துப்பாக்கி பட பாடல் வெளியீடு தள்ளிவைப்பு :

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், கலைப்புலி S. தாணு தயாரிப்பில், இளையதளபதி விஜய் மற்றும் காஜல் அகர்வால் நடித்திருக்கும் படம் துப்பாக்கி. இப்படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். இப்போது கோலிவுடின் ஹாட் டாபிக்  இதுதான் துப்பாக்கி பட வெளியீடு எப்போது.

துப்பாக்கி படம் வெளியாவதில் துப்பாக்கி மற்றும் கள்ள துப்பாக்கி படத்தலைப்பில் பிரச்சனை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தாணு அளித்த பேட்டியில் துப்பாக்கி திரைப்படம் திட்டமிட்ட படி தீபாவளி அன்று திரைக்கு வரும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் துப்பாக்கி பட பாடல்கள் இம்மாதம் 6ஆம்(அக்டோபர்) தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு இம்மாதம் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட காரணத்தால் வருகின்ற 11ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எது எப்படியோ இளையதளபதி விஜயின் ரசிகர்களுக்கு  இந்த தீபாவளி சரவெடியாய் துப்பாக்கி திரைப்படம் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

செய்திகள் WJ. சத்யா.


No comments: